Theme Check

76 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொளுத்திய வெயில்.. ஓடி ஓளியும் மக்கள் !!

76 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொளுத்திய வெயில்.. ஓடி ஓளியும் மக்கள் !!

76 ஆண்டுகளில் இல்லாத அளவில் கொளுத்திய வெயில்.. ஓடி ஓளியும் மக்கள் !!
X

தலைநகர் டெல்லியில் பனி காலத்தில் பனியும் கோடைக்காலத்தில் வெப்பமும் கடுமையாகவே இருக்கும். இந்த நிலையில், இந்தாண்டு கோடை காலம் தொடங்குவதற்கு முன்பேக வெயில் கொளுத்தி வருகிறது. அனல் காற்றும் வீசி வருகிறது.

டெல்லியில் சப்தர்ஜங் பகுதியில் உள்ள இந்திய வானிலை ஆராய்ச்சி மையம், வெயில் அளவை வெளியிட்டது. அது அதிர்ச்சி அளிக்கும் வகையில் அமைந்திருந்தது. அதாவது 76 ஆண்டுகளுக்கு பிறகு மார்ச் மாத அதிகபட்ச வெப்பநிலை டெல்லியில் 104 டிகிரி வெயில் என பதிவாகியுள்ளது.

டெல்லியில் நேற்று அதிகபட்ச வெப்பநிலை 104.18 டிகிரி பாரன்ஹீட்டாக (40.1 டிகிரி செல்சியஸ்) பதிவாகி இருந்தது. இந்த அளவு, இயல்புநிலையை விட மிக அதிகம் ஆகும்.

இதுகுறித்து இந்திய வானிலை ஆராய்ச்சி மைய மண்டல வானிலை மையத்தின் தலைவர் குல்தீப் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், கடந்த 1945ஆம் ஆண்டு மார்ச் 31ஆம் தேதி, டெல்லியில் 104.7 டிகிரி வெயில் பதிவானது. அதன்பிறகு கடந்த 76 ஆண்டுகளில் மார்ச் மாதத்தில் டெல்லியில் இவ்வளவு அதிகமான வெயில் பதிவானது இதுவே முதல்முறை என கூறினார்.
டெல்லியில் நேற்று ‘ஹோலி’ பண்டிகை கொண்டாடிய நேரத்தில் இப்படி வெயில் வாட்டி வதைத்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it