Theme Check

ஓட்டுக்கு பணம் கொடுத்து மாட்டிக் கொண்ட அதிமுகவினர்!!

ஓட்டுக்கு பணம் கொடுத்து மாட்டிக் கொண்ட அதிமுகவினர்!!

ஓட்டுக்கு பணம் கொடுத்து மாட்டிக் கொண்ட அதிமுகவினர்!!
X

மதுரை மாநகராட்சி 43ஆவது வார்டில் திமுக சார்பில் முகேஷ் சர்மா என்பவரும், அதிமுக சார்பில் முருகன் என்பவரும் போட்டியிடுகின்றனர். இந்த வார்டில் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக அதிமுக வட்ட செயலாளர் அரியநாச்சி (62) என்பவரை போலீஸார் கைது செய்தனர்.

அவர் வைத்திருந்த 8,500 ரூபாய் பணத்தை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். தொடர்ந்து தெப்பக்குளம் காவல் நிலையம் வந்த முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காவல் துறையினரிடம் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக வேட்பாளர்களின் வெற்றியை தடுக்கும் நோக்கில் திமுகவினர் செயல்பட்டு வருகின்றனர் என்றும், மக்கள் கையில் பணமே வைத்திருக்க கூடாதா எனவும் கேள்வி எழுப்பினார்.

sellur

43ஆவது வார்டில் திமுக வேட்பாளரின் தூண்டுதல் பெயரில், அதிமுக வேட்பாளருக்கு தொல்லை கொடுத்து வருகின்றனர் என்று குற்றம்சாட்டிய செல்லூர் ராஜூ, அதிமுக வட்ட செயலாளர் அரியநாச்சி 8000 ரூபாய் வைத்திருந்ததாக கூறி கைது செய்து உள்ளனர், தேர்தல் விதியை மீறி அவர் செயல்படவில்லை என்று கூறினார்.

தாசில்தார்கள் திமுகவினர் தூண்டுதல் பெயரில் செயல்படுகின்றனர், இனி இதுபோல் நடந்தால் அதிமுக சார்பில் தக்க பதிலடி கொடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.

அதிமுக வேட்பாளர் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது, அதனால் அவருடைய வெற்றியை தடுக்கும் நோக்கில் திமுகவினர் செயல்படுகின்றனர் என்று குற்றம் சாட்டினார்.

newstm.in

Next Story
Share it