தலிபான்கள் நல்ல ஆட்சியை வழங்குவார்கள்.. பாக். கிரிக்கெட் அஃப்ரிடி சர்ச்சை கருத்து !!
தலிபான்கள் நல்ல ஆட்சியை வழங்குவார்கள்.. பாக். கிரிக்கெட் அஃப்ரிடி சர்ச்சை கருத்து !!

ஆப்கானிஸ்தான் 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தலிபான்களின் அதிகாரத்திற்குள் வந்துள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களையும் கட்டுப்படுத்திய தலிபான்கள் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது.
இதனிடையே, ஆப்கானிஸ்தானில் ஆட்சி அமைக்கும் நடவடிக்கைகளை தலிபான்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கு நட்பு நாடான பாகிஸ்தான், தலிபான்களின் ஆட்சியை நேரடியாகவும் மறைமுகமாகவும் வரவேற்றுப் பேசியுள்ளது. இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஷாஹித் அஃப்ரிடி, தலிபான்கள் ஆட்சிக்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பேட்டி அளித்த அஃப்ரிடி, ஆப்கானிஸ்தானை நல்லெண்ணத்துடன் கைப்பற்றி உள்ளனர். தலிபான்கள் மிகவும் நேர்மறையான மனதுடன் ஆட்சிக்கு வந்துள்ளனர். அவர்கள் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறார்கள். தலிபான்கள் கிரிக்கெட்டை மிகவும் விரும்புகிறார்கள் என்று நான் நம்புகிறேன். ஆப்கானிஸ்தானில் அமையவுள்ள தாலிபான்களின் ஆட்சியை வரவேற்றுள்ளார் என்றும் ஷாஹித் அஃப்ரிடி கூறினார்.

ஆனால் பெண் பத்திரிகையாளர்கள் பணிக்கு வரவேண்டாம், இசைக்கு அனுமதியில்லை, பெண்கள் பயணங்களின் போது ஆண் துணை இருக்க வேண்டும் என தலிபான்கள் கட்டுப்பாடு விதித்துள்ளது. மேலும் காபூல் விமான நிலையத்தில் தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.
முன்னதாக தப்பிச்செல்ல காரில் செல்லும் மக்கள் சுட்டுக்கொல்லப்படுகின்றனர், வீடு வீடாக சென்று பெண்களை கடத்தி தலிபான்கள் கட்டாய திருமணம் செய்கின்றனர், முன்னாள் அரசு, ராணுவ ஆதரவாளர்கள் கொல்லப்படுகின்றனர் என பல்வேறு தகவல்கள் வெளிவந்து அடுத்தடுத்து வரும் வீடியோக்களால் அதிர்வலைகள் ஏற்பட்டுள்ளது.
newstm.in

