Theme Check

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.!!

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.!!

இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூடுகிறது.!!
X

தமிழ்நாடு சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் இன்று கூடுகிறது என சபாநாயகர் அப்பாவு கடந்த பிப்ரவரி 5 ஆம் தேதி அறிவித்தார். மேலும், நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில் சட்டப்பேரவைக் கூட்டம் நடைபெறும் எனவும் சட்டமன்ற சிறப்புக் கூட்டத்தில் நீட் விலக்கு குறித்து தீர்மானம் நிறைவேற்றி, குடியரசுத் தலைவருக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்தார்.

இன்று காலை 10 மணிக்கு சட்டப்பேரவை கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை நாமக்கல் கவிஞர் மாளிகையில் சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூ.கட்சி, பாமக, விசிக, மதிமுக உள்ளிட்ட 10 கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

இந்த அனைத்து கட்சி கூட்டத்தில்,

  • நீட் விலக்கு மசோதாவை திருப்பிய அனுப்பிய ஆளுநருக்கு அனைத்துக்கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
  • நீட் விலக்கு தொடர்பாக சிறப்பு சட்டமன்ற கூட்டத்தொடரை நடத்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
  • நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
  • முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான சட்டமன்ற அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
Next Story
Share it