Theme Check

பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது… எய்ம்ஸ் இயக்குநர் குலேரியா தகவல்..!

பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது… எய்ம்ஸ் இயக்குநர் குலேரியா தகவல்..!

பள்ளிகளை திறக்கும் நேரம் வந்துவிட்டது… எய்ம்ஸ் இயக்குநர் குலேரியா தகவல்..!
X

டில்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் ரன்தீப் குலேரியா தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் படிப்படியாக பள்ளிகளைத் திறக்க தொடங்கலாம் என்பதே எனது கருத்து.

முதலில், கொரோனா பாசிட்டிவ் விகிதம் 5 சதவீதத்திற்கும் கீழ் உள்ள மாவட்டங்களில் மட்டும் பள்ளிகளைத் திறக்க வேண்டும். பள்ளிகள் திறப்பு காரணமாக கொரோனா பாதிப்பு அதிகரிப்பதற்கான ஆதாரங்கள் ஏதேனும் கண்டுபிடிக்கப்பட்டால், உடனடியாக பள்ளிகளை மூடிவிடலாம்.

அதேநேரம், கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் சுழற்சி முறையில் மாணவர்களைப் பள்ளிகளுக்கு வர வைக்கும் முயற்சி எடுக்கப்பட வேண்டும். இந்த முறை இல்லையென்றால் வேறு முறைகளை பயன்படுத்தியாவது பள்ளிகளை படிப்படியாகத் திறக்க வேண்டும்.

இதன் மூலம், குழந்தைகளுக்கு வழக்கமான ஒரு வாழ்க்கையை நம்மால் அளிக்க முடியும். இது மட்டுமல்ல, ஒரு குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் பள்ளிப் படிப்பு முக்கியமானது. எனவே, அதை முறையாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

1

கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் முறையில் மாணவர்களுக்கு பாடங்கள் கற்பிக்கப்பட்டு வருகிறது. ஆனால், ஆன்லைனில் கற்பிக்கும் முறையால் டிஜிட்டல் டிவைட் ஏற்பட்டுள்ளது. அதாவது, டிஜிட்டல் தொழில்நுட்பம் முறையாகச் சென்று சேராத இடங்களில் வசிக்கும் சிறார்களுக்கு இது பாகுபாடாக அமைந்துள்ளது என யுனிசெஃப் குறிப்பிட்டுள்ளது. இதற்காகத்தான் பள்ளிகளை திறப்பது குறித்து நாம் விரைந்து முடிவெடுக்க வேண்டும் எனக் கூறுகிறேன்.

இந்தியாவில் குழந்தைகள் அதிகளவில் வைரசை எதிர்கொண்டுள்ளனர். இதனால், பெரும்பாலான சிறுவர்கள் மத்தியில் இயற்கையான நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. எய்ம்ஸ் மற்றும் உலக சுகாதார அமைப்பு நடத்திய ஆய்வில், நாட்டில் உள்ள இளைஞர்களை விட சிறுவர்கள் மத்தியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

எனவே, அடுத்து வரும் கொரோனா மூன்றாவது அலையில் சிறுவர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவார்கள் என உறுதியாகக் கூற எவ்வித ஆதாரமும் இல்லை. முக கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை முறையாக கடைப்பிடிப்பது ஆகியவற்றை சரியாக பின்பற்றுவதன் மூலம் பள்ளிகளைத் திறக்கும் பணியை தொடங்கலாம். ஏனென்றால், பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டு இருப்பது குழந்தைகளை மனரீதியாக அதிகம் பாதிக்கிறது.

பாரத் பயோடெக் நிறுவனம் 2 முதல் 17 வயதுடைய சிறுவர்கள் மத்தியில் நடத்தும் கோவாக்சின் சோதனையின் முதல் கட்ட முடிவுகள் நம்பிக்கையூட்டும் வகையில் இருக்கிறது. அனைத்தும் திட்டமிட்டபடி நடந்தால், வரும் செப்டம்பர் மாதம் முதல் சிறார்களுக்கு வேக்சின் செலுத்தும் பணிகள் தொடங்கப்படும்” என்று அவர் தெரிவித்தார்.

Tags:
Next Story
Share it