Theme Check

கொசுவர்த்தி ஏற்றிவைத்து உறங்கிய இளைஞர் தீயில் கருகி உயிரிழந்த சோகம் !!

கொசுவர்த்தி ஏற்றிவைத்து உறங்கிய இளைஞர் தீயில் கருகி உயிரிழந்த சோகம் !!

கொசுவர்த்தி ஏற்றிவைத்து உறங்கிய இளைஞர் தீயில் கருகி உயிரிழந்த சோகம் !!
X

வீட்டில் கொசுவர்த்தி ஏற்றிவைத்து உறங்கிய இளைஞர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்ப்படுத்தி உள்ளது

சென்னை திருவொற்றியூர் பாலகிருஷ்ணா நகர் செல்வ விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜெகதீஷ் (23). இவர் ஆன்லைன் உணவு வினியோக நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.

இந்த நிலையில், இவர் நேற்று முன்தினம் வீட்டில் கொசுவர்த்தி ஏற்றிவைத்துவிட்டு உறங்கியுள்ளார். அப்போது ஜெகதீஷ் தனது தாயின் புடவையை போர்த்தி கொண்டுள்ளார். இதனிடையே, நள்ளிரவில் கொசுவர்த்தி சரிந்து புடவையின் மீது பட்டு தீப்பற்றியது. அடுத்த சில நொடிகளிலேயே தீ ஜெகதீஷ் உடலில் மள மளவென பரவியது. சேலையும் எரிந்ததால் தீ கடுமையாக பரவியது.

youth death

பின்னர், தீக்காயங்களுடன் அலறிய ஜெகதீசை அருகில் இருந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். உடல் முழுவதும் தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்றுவந்த ஜெகதீஷ் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சாத்தாங்காடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உறக்கத்தின்போது ஒரு கொசுவர்த்தி இளைஞரின் உயிரை பரித்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

newstm.in

Next Story
Share it