Theme Check

காதலியை கொன்றுவிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் இரவில் நடந்த பயங்கரம் !!

காதலியை கொன்றுவிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் இரவில் நடந்த பயங்கரம் !!

காதலியை கொன்றுவிட்டு காதலன் எடுத்த விபரீத முடிவு.. சென்னையில் இரவில் நடந்த பயங்கரம் !!
X

காதலி வேறு ஒரு நபரை திருமணம் செய்ய முயன்றதால் அவரை கொலை செய்துவிட்டு, காதலன் தற்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சௌகார்பேட்டையில் துணிக்கடை நடத்தி வந்தவர் சந்தீப். 40 வயதான இவர் ஏற்கனவே திருமணம் முடிந்து, கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியை விவாகரத்து செய்து தனியாக வசித்து வந்தார். இந்த நிலையில் அவருக்கு இளச்சி (35) என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது.

kallakadhal

இதில் இளச்சியும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர் ஆவார். இந்நிலையில் சந்தீப்பும் இளச்சியும் திருமணம் செய்துகொள்ளாமலேயே ஒரே வீட்டில் ஒன்றாக சேர்ந்து 3 ஆண்டுகள் வாழ்ந்து வந்துள்ளனர். அப்போது திருமணம் செய்துக்கொள்ளலாம் என முடிவு செய்து வீட்டில் கணவன், மனைவி போன்று உல்லாசமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே இளச்சி பெங்களூருவை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்துகொள்ள முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அறிந்து சந்தீப் பெரும் அதிர்ச்சி அடைந்தார். மேலும் இளச்சி பிரிந்து செல்வதை தாங்கிக்கொள்ள முடியாத சந்தீப், பெங்களூரு செல்ல புறப்பட்ட இளச்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபடவே இருவருக்கும் இடையே மோதல் உருவாகியுள்ளது.

kallakadhal

அப்போது, ஆத்திரத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி இளச்சியை கொலை செய்தார் சந்தீப். மேலும் தானும் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார் இதனை கண்ட அப்பகுதி மக்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


newstm.in

Next Story
Share it