Theme Check

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரண வழக்கிலும் உண்மை வெளியே வரும்.. கோகுல்ராஜ் வழக்கறிஞர் உறுதி

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரண வழக்கிலும் உண்மை வெளியே வரும்.. கோகுல்ராஜ் வழக்கறிஞர் உறுதி

டிஎஸ்பி விஷ்ணுப்பிரியா மரண வழக்கிலும் உண்மை வெளியே வரும்.. கோகுல்ராஜ் வழக்கறிஞர் உறுதி
X

நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டில் டிஎஸ்பியாக விஷ்ணுபிரியா பணிபுரிந்து வந்தார். பணியில் சுறுசுறுப்பாகவும், நேர்மையாகவும் நடந்து கொண்டார் என்று சக போலீஸ்காரர்களே கூறி வந்தார்கள். இந்த நிலையில்தான் கோகுல்ராஜ் என்ற இளைஞர் 2015 ஜீன் 24 அன்று கொலை செய்யப்பட்டு ரயில்வே தண்டவாளத்தில் கிடந்தார்.

இந்த கொலை வழக்கில் சிலர் கைது செய்யப்பட்டாலும் ஏ1 ஆன யுவராஜ் கைது செய்யப்படவில்லை. இதற்கு பலமுனைகளில் இருந்தும் போலீஸ் அதிகாரிகள் டிஎஸ்பி விஷ்ணுபிரியாவுக்கு மனஉளைச்சல் கொடுத்து வந்திருக்கிறார்கள். ஒருதரப்பு யுவராஜை கைது செய்யக்கூடாது என மிக கடுமையாகவே டிஎஸ்பியை நெருக்கியுள்ளது. சம்மந்தப்பட்ட யுவராஜ் பலமுறை டிஎஸ்பியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு மிரட்டலாகவும் பேசியிருக்கிறார்.

இந்த சூழ்நிலையில்தான் டிஎஸ்பி விஷ்ணுபிரியா, செப்டம்பர் 18ஆம் தேதி மதியம் தனது முகாம் அலுவலகத்திலேயே தூக்கில் தொங்கிய நிலையில் இறந்துகிடந்தார். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

advacate mohan

இந்த நிலையில், கோகுல்ராஜ் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கிகொடுத்த வழக்கறிஞர் ப.பா மோகன் ஈரோட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய வழக்கறிஞர் ப.பா மோகன், கோகுல்ராஜ் கொலை வழக்கில் கிடைத்த வெற்றி என்பது அம்பேத்காருக்கும், பெரியாருக்கும், சமூக நீதிக்கும் கிடைத்த வெற்றி. இந்த வழக்கில் கிடைத்த வெற்றி என்னை போன்ற வழக்கறிஞர்கள் உருவாக வேண்டும் என்றும், ஒடுக்கப்பட்ட மற்றும் விழிம்புநிலை மனிதருக்கு சமநீதி உருவாக்க வேண்டும் என்பதில் இது ஒரு மயில் கல்லாக இருக்கும் என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், காவல் துணை கண்காணிப்பாளர் விஷ்ணுபிரியா தற்கொலை வழக்கிலும் உண்மையை கொண்டு வருவோம் என்று கூறினார். மேலும் கொடுக்கப்பட்டுள்ள தீர்ப்பு மாறாமல் விடுதலையான 5 பேரின் மீதும், சித்ரா சார்பில் மேல்முறையீடு செய்யப்படும் என்றும் வழக்கறிஞர் மோகன் தெரிவித்துள்ளார்.

newstm.in

Next Story
Share it