மூன்று மனைவிகளை கழற்றிவிட்டு 4ஆவதாக சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன் கைது !
மூன்று மனைவிகளை கழற்றிவிட்டு 4ஆவதாக சிறுமியை கர்ப்பமாக்கிய கொடூரன் கைது !

ஏற்கனவே மூன்று திருமணம் முடிந்த அரசு பேருந்து நடத்துனர், சிறுமியை கர்ப்பமாக்கிய புகாரில் கைது செய்யப்பட்டார்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள பெரியகருக்கை கிராமத்தை சோத்தவர் ராதாகிருஷ்ணன்(41 ). அரசு பேருந்தில் கண்டக்டராக பணிபுரிந்து வரும் இவருக்கு ஏற்கனவே 3 பெண்களுடன் ஏற்கனவே திருமணம் நடந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும் 3 மனைவிகளுக்கும் குழந்தை இல்லாததால் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால், மூன்று மனைவிகளையும் பிரிந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்தநிலையில், நடத்துனர் ராதாகிருஷ்ணனுக்கு கடலூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. நடந்துனராக பணி புரியும் போது பேருந்தில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. அந்த பெண்ணிற்கு ஏற்கனவே திருமணம் முடிந்து 3 மகள்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் அப்பெண் தனியாக வசித்து வந்துள்ளார்.
இதையடுத்து, தனக்கு வாரிசு வேண்டும் என்று தெரிவித்த ராதாகிருஷ்ணன், அப்பெண் மகளான சிறுமியை தனக்கு திருமணம் செய்து தருமாறு வற்புறுத்தியுள்ளார். இதற்கு அந்த பெண்ணும் சம்மதம் தெரிவிக்கவே, கடந்த ஆகஸ்டு மாதம் 6ஆம் தேதியன்று ஒரு கோவிலில் ராதாகிருஷ்ணனுக்கும், சிறுமிக்கும் தாய் முன்னிலையில் திருமணம் நடைபெற்றுள்ளது.

பின்னர் ராதாகிருஷ்ணன் சிறுமியுடன் வற்புறுத்தி உடலுறவு வைத்துக்கொண்ட காரணத்தால், சிறுமி 5 மாத கர்ப்பிணியாக இருக்கிறார். இதன்பின்னர் தான் இந்த தகவல் வெளிவந்துள்ளது.
சிறுமி கர்ப்பமாக இருப்பதை அறிந்து வந்த மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரி, அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணை நடத்தி வழக்குப்பதிவு செய்த போலீசார், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதனையடுத்து நடத்துனர் ராதாகிருஷ்ணன் மற்றும் உடந்தையாக இருந்த சிறுமியின் தாயையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
newstm.in

