Theme Check

கணவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும் மனைவி.. ஒவ்வொருவரையும் நெகிழ வைக்கும் நிகழ்வு !!

கணவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும் மனைவி.. ஒவ்வொருவரையும் நெகிழ வைக்கும் நிகழ்வு !!

கணவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தும் மனைவி.. ஒவ்வொருவரையும் நெகிழ வைக்கும் நிகழ்வு !!
X

மறைந்த கணவரின் நினைவாக மனைவி ஒருவர் கோவில் கட்டி வழிபாடு நடத்தி வரும் நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆந்திரபிரதேச மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் பெண்ணின் செயல் அனைவரையும் நெகிழ வைத்துள்ளது. மறைந்த கணவருக்காக கோவில் கட்டி சிலை வைத்து வழிபாடு நடத்தி வருகிறார் பத்மாவதி. அங்கிரெட்டி - பத்மாவதி தம்பதியர் திருமணம் முடிந்து மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

andra wife

இந்தநிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி அங்கிரெட்டி உயிரிழந்துள்ளார். கணவர் உயிரிழந்த சோகம் தாங்க முடியாமல் பத்மாவதி தினமும் தவித்து வந்துள்ளார். ஆனால் தனது கணவர் தனது அருகிலேயே இருப்பதாக உணர்ந்த பத்மாவதி அவருக்கு கோவில் கட்ட முடிவு செய்தார். அதாவது அங்கிரெட்டி தனக்கு கோவில் கட்டும்படி சொன்னதால் இந்த கோவிலை கட்டியதாக பத்மாவதி நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

andra wife

இந்த கோவிலில் தனது கணவரின் பலிங்கு உருவ சிலையும் அவர் நிறுவி உள்ளார். கணவர் பிறந்த நாள், நினைவு நாள் உள்ளிட்ட சிறப்பு நாட்களில் அவரது சிலைக்கு பூஜை செய்து வழிபாடு நடத்தி வருகிறார். கோவில் கட்டி வெறும் வழிபாடு மட்டும் நடத்துவதோடு நின்றுவிடாமல் பௌர்ணமி அன்று ஏழை எளிய மக்களுக்கு அன்னதானமும் வழங்கி வருகிறார்.
கணவருக்கு கோவில் கட்டி வழிபாடு நடத்தி உதவிசெய்து வரும் மனைவியின் செயல் அனைவரையும் நெகிழச்செய்துள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it