Theme Check

கணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி கொலை செய்த மனைவி!!

கணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி கொலை செய்த மனைவி!!

கணவனின் கண்ணில் மிளகாய் பொடி தூவி கொலை செய்த மனைவி!!
X

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே கண்ணில் மிளகாய் பொடி தூவி கணவரை மனைவி அடித்துக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமலாபுரம் கிராமத்தை சேர்ந்த முருகன்(40) என்பவருக்கு நாச்சியார் (36) என்ற மனைவியும் 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். கட்டிட தொழிலாளியான முருகனுக்கு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி வந்த நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. முருகன் அந்த பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார்.

இதனையறிந்த நாச்சியார் தனது கணவரை கண்டித்துள்ளார். ஆனால் முருகன் அதனை கேட்கவில்லை தொடர்ந்து அந்தப் பெண்ணின் வீட்டிற்கு சென்று வந்துள்ளார். சம்பவத்தன்று கணவன்-மனைவிக்கிடையே தகராறு ஏற்பட்டது.

murder

மது போதையில் இருந்த முருகன் மனைவியை அவதூறாக பேசியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த நாச்சியார் சமையலறையில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து வந்து முருகனின் முகத்தில் வீசியுள்ளார். பின்னர் அங்கு கிடந்த கம்பால் முருகனை தாக்கியதாகவும் கூறப்படுகிறது.

ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிய முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு செங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீஸார் நாச்சியாரிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

newstm.in

Next Story
Share it