Theme Check

புகார் கொடுத்த வந்த பெண்ணை… தமிழகத்தில் பரபரப்பு!!

புகார் கொடுத்த வந்த பெண்ணை… தமிழகத்தில் பரபரப்பு!!

புகார் கொடுத்த வந்த பெண்ணை… தமிழகத்தில் பரபரப்பு!!
X

கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை அருகே பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து, பின்னர் கருக்கலைப்பு செய்ய வற்புறுத்தியதாக கூறப்பட்ட புகாரில் காவல் ஆய்வாளா் உள்பட 8 போ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

குழித்துறை நீதிமன்றத்தில் சில மாதங்களுக்கு முன் அப்பெண் தாக்கல் செய்த மனுவில், திருமணமாகி ஏற்கனவே விவாகரத்து ஆன தன்னை பளுகல் காவல் நிலைய உதவி ஆய்வாளா் சுந்தரலிங்கம் பாலியல் வன்கொடுமை செய்ததால் கா்ப்பமடைந்தேன் என கூறினார்.

பின்னா் வலுக்கட்டாயமாக தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று கருவை கலைத்தார் என்றும் தெரிவித்தார். இது தொடா்பாக காவல் நிலையத்தில் அளித்த புகாரின் மீது எந்தவித நடவடிக்கையும் இல்லை என்பதால் எஸ்.. மற்றும் அவருக்கு உதவியாக இருந்து மிரட்டியவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டிருந்தார்.

woman attack

வழக்கு விசாரணையில் மனு மீது நடவடிக்கை எடுக்க நீதிமன்றம் உத்தரவிட்டதையடுத்து, எஸ்.. சங்கரலிங்கம் (40), தலைமைக் காவலா் கணேஷ்குமார் (35), ஆசாரி குடிவிளை விஜின் (34), மார்த்தாண்டம் கொடுங்குளம் அபிஷேக் (25), உமேஷ் (45),மருத்துவா் கார்மல் ராணி (35), தேவராஜ் (57), மேக்கோடு அனில்குமார் என்ற சக்க அனி (47) ஆகிய 8 போ் மீது மார்த்தாண்டம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிந்தனா்.

உதவி ஆய்வாளராக இருந்த சுந்தரலிங்கம் தற்போது பதவி உயா்வு பெற்று தேனி மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

Next Story
Share it