Theme Check

செயின் பறிப்பால் கீழே விழுந்த பெண் - பட்டப்பகலில் நடந்த சம்பவம்

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நாரணன்பேடு பகுதியில் இளைஞர்கள் இருவர் பெண் ஒருவரிடம் பட்டப்பகலில் செயின் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பெண்ணிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர்கள் இருவர் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

செயின் பறிப்பால் கீழே விழுந்த பெண் - பட்டப்பகலில் நடந்த சம்பவம்
X

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே நாரணன்பேடு பகுதியில் இளைஞர்கள் இருவர் பெண் ஒருவரிடம் பட்டப்பகலில் செயின் பறித்துச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வரும் பெண்ணிடம் இருந்து இருசக்கர வாகனத்தில் வேகமாக வந்த இளைஞர்கள் இருவர் 8 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர். இருவரும் ஹெட்மெட் அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணமுடியவில்லை.


வேகமாக வந்து செயினை பறித்துச் சென்றதால் அப்பெண் நிலைதடுமாறி கீழே விழந்தார். இதனையடுத்து அப்பெண் கூச்சலிடவே, அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் இருவரும் பைக்கில் வேகமாக சென்றுவிட்டனர். இச்சம்பவம் அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. அந்த வீடியோவை வைத்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுபோன்று செயின் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் காவல்துறையினர் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

newstm.in

Tags:
Next Story
Share it