நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் வைத்திருந்த பெண்!!
நகைக்காக சிறுவனை கொன்று பீரோவில் வைத்திருந்த பெண்!!

கன்னியாகுமரி அருகே நகைக்காக 4 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடியப்பட்டணம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த ஜான் ரிச்சார்ட் என்பவர் வெளி நாட்டில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார். அவரது மனைவி சகாய சில்ஜா, மகன் ஜோகன் ரிஷி, மகள் ஆகியோர் கடியப்பட்டணம் பகுதியில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர்.
இந்நிலையில் சிறுவன் ஜோகன் ரிஷி வீட்டிற்கு வெளியே விளையாடி கொண்டிருந்தான். அப்போது திடீரென சிறுவன் மாயமானதை அடுத்து அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தனர். ஆனால் சிறுவன் கிடைக்காததால் சகாய சில்ஜா மணவாளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், சிறுவன் நகைக்காக கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகமடைந்தனர். பக்கத்து வீட்டில் வசிக்கும் பாத்திமா என்ற பெண்ணை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதற்கிடையில் சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் பாத்திமா வீட்டை அடித்து நொறுக்கி சூறையாடினர் அப்போது அங்கிருந்த பீரோவும் உடைந்தது. அதில். அந்த சிறுவனின் வாய் துணியால் கட்டப்பட்டிருந்தது.
இதைக்கண்ட பொதுமக்கள் சிறுவனை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

