பாயாசம் கொடுத்து மூதாட்டியிடம் நகை திருடிய பெண்.. விசாரணையில் பரபரப்பு தகவல்கள் !!
பாயாசம் கொடுத்து மூதாட்டியிடம் நகை திருடிய பெண்.. விசாரணையில் பரபரப்பு தகவல்கள் !!

நடிகர் விவேக் காமெடி ஒன்றில் பாயாசம் இடம்பெறும். பாட்டி தான் பாயாசம் கொடுத்து மிரட்டுவார். இந்த காமெடியை உண்மையாக்கும் வகையில் பாசாயம் கொடுத்து மூதாட்டியிடம் வேலையை காட்டிய சம்பவம் நடந்துள்ளது.
சென்னை ராயபுரம் பி.வி. கோவில் தெருவில் மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். அவர் கோவிலுக்குச் செல்லும் போது பத்மாவதி என்ற பெண் அறிமுகமாகி பேச்சுக்கொடுத்துள்ளார். பழம்போல் பேசியதால் அதனை நம்பி மூதாட்டி பழக்கமாகியுள்ளார். இந்நிலையில் பத்மாவதி தனக்கு திருமண நாள் என்று கூறி மூதாட்டிக்கு பாயாசம் கொடுத்துள்ளார்.

அதை அருந்திய மூதாட்டி சிறிது நேரத்தில் மயக்கமடைந்துள்ளார். அந்த பாயாசத்தில் மயக்க மருந்து கலந்திருந்ததாக தெரிகிறது. இதையடுத்து மயக்கமடைந்த மூதாட்டியிடம் இருந்து 5 சவரன் நகையை திருடிக்கொண்டு பத்மாவதி தப்பிச்சென்றதாக கூறப்படுகிறது. சிறிது நேரத்துக்கு பிறகு மூதாட்டி கண்திறந்து பார்த்துள்ளார்.
அப்போது நகை காணாமல் போனதையறிந்து அதிர்ச்சியடைந்த மூதாட்டி, ராயபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், பத்மாவதியை கைது செய்தனர். மேலும் பாயாசம் கொடுத்து ஆட்டையை போட்ட 5 சவரன் நகையை பறிமுதல் செய்தனர். பாசாயம் கொடுத்து மூதாட்டியிடம் பெண் நகை பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
newstm.in

