Theme Check

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..!

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..!

ஓடும் ரயிலில் இருந்து இறங்க முயன்ற பெண்... நொடிப்பொழுதில் காப்பாற்றிய ரயில்வே போலீஸ்..!
X

ஆந்திராவின் திருப்பதி ரயில் நிலையத்தில் இறங்க வேண்டிய ஒரு தம்பதியினர் தூக்கத்தின் காரணமாக அவர்கள் இறங்க வேண்டிய இடத்தை தவறியதாக கூறப்படுகிறது. அடுத்த நிலையத்தில் நிறுத்தம் இல்லாததால் ரயில் பிளாட்பாரத்தில் மெதுவாக சென்று கொண்டிருந்த நிலையில், தம்பதியினர் இந்த ரயில் நிலையத்தில் இறங்கி விடலாம் என முடிவு செய்து முன்னதாக கணவர் ஓடும் ரயிலில் இருந்து இறங்கி விட்டார்.

இதையடுத்து மனைவி ஒடும் ரயிலில் இறங்க முயற்சிக்கும் போது கால் தவறி கீழே விழுந்த நிலையில், அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீஸ் சதீஷ் உடனடியாக அவரை வெளியே இழுத்ததால் ரயிலுக்கு அடியில் சிக்காமல் காப்பாற்றப்பட்டார்.

ரயிலுக்குள் தவறி விழவிருந்த பயணி ஒருவரை அங்கு பணியில் இருந்த ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் காப்பாற்றி இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அவர்களுக்கு பாராட்டும் குவிந்து வருகிறது.

Tags:
Next Story
Share it