வண்டியின் நம்பர் பிளேட்டால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்! அப்படி என்ன நம்பர்?
வண்டியின் நம்பர் பிளேட்டால் மன உளைச்சலுக்கு ஆளான பெண்! அப்படி என்ன நம்பர்?

டெல்லியைச் சேர்ந்த பெண்ணின் இருசக்கர வாகன நம்பர் ப்ளேட் விவகாரம் மாநில மகளிர் ஆணையம் வரை சென்றுள்ளது. அந்த அளவுக்கு அப்பெண் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறார்.
தீபாவளி பண்டிகையின் போது புதிதாக ஸ்கூட்டர் வாங்கிய பெண் ஒருவருக்கு கொடுக்கப்பட்ட வாகன எண்ணால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அப்பெண்ணுக்கு DL 3S EX என்ற வரிசையில் வாகன எண் கொடுக்கப்பட்டிருக்கிறது.

S EX என்பது SEX என படிக்கும் வகையில் இருப்பதால் அப்பெண் பெரும் மன சங்கடத்திற்கு ஆளாகியிருக்கிறார். DL என்பது டெல்லி மாநிலத்தையும், அடுத்து வரும் எண் மாவட்டத்தையும், S என்றால் ஸ்கூட்டர், C என்றால் கார் என்றும் குறிப்பிடப்படும்.
அந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட எண்ணால் கேலிக்கும் கிண்டலுக்கும் ஆளானதால் அவரால் ஸ்கூட்டரை வெளியே எடுக்கமுடியாத சூழல் உண்டாகியிருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தீர்வு காண டெல்லி மாநில மகளிர் ஆணையத்திடம் புகார் தெரிவித்திருக்கிறார்.

புகாரை ஏற்ற மகளிர் ஆணையம், இதேப்போன்று பதிவெண் மீது கொடுக்கப்பட்ட புகார், வாகனங்களின் எண்ணிக்கையை சமர்ப்பிக்கவும், இந்த புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்தும் 4 நாட்களுக்குள் விளக்கமளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
newstm.in

