Theme Check

இண்டிகோ ஏர்லைன்ஸின் இணையதளத்தையே ஹேக் செய்த இளைஞர்

இண்டிகோ ஏர்லைன்ஸின் இணையதளத்தையே ஹேக் செய்த இளைஞர்

இண்டிகோ ஏர்லைன்ஸின் இணையதளத்தையே ஹேக் செய்த இளைஞர்
X

விமான பயணி ஒருவர், தான் தொலைத்த பையை கண்டுபிடிப்பதற்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வலைதளத்தையே ஹேக் செய்துள்ளார்.

நந்தகுமார் என்ற இளைஞர் பாட்னாவில் இருந்து மும்பைக்கு இண்டிகோ விமானம் மூலம் சென்றுள்ளார். பின்னர் விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் வீடு திரும்பிய பிறகே, அவரது உடைமை மாற்றி வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து தனது உடைமை மாற்றி வழங்கப்பட்டது குறித்து, வாடிக்கையாளர் சேவை மையத்தை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். ஆனால் வழக்கம் போல் வாடிக்கையாளர் சேவை மையத்தினர் அலட்சியம் காட்டியதாக கூறப்படுகிறது. இதனால், எந்த பயனும் இல்லையென உணர்ந்த அவர், இண்டிகோ நிறுவனத்தின் வலைதளத்தை தனது நிரல் அறிவு மூலம் அவர் ஊடுருவி உள்ளார்.

ss

அதன்படி, சக பயணியின் பையில் இருந்த பிஎன்ஆர் விவரங்கள் மூலம் இண்டிகோ இணையதளத்தை ஆராய்ந்து, வருகை பதிவை பதிவு செய்தல், முன் பதிவை திருத்துதல், விவரங்களை புதுப்பித்தல் என பல முறைகளை கையாண்டுள்ளார். எனினும், அவரின் விவரங்களை கண்டுபிடிக்க முடியவில்லை.

இறுதியாக, இணையதளத்தை உருவாக்குபவரின் கட்டுப்பாட்டு தளத்திற்கு சென்று பயணிகளின் வருகை பதிவை ஆராய்ந்து, கடைசியாக, பையை எடுத்து சென்ற பயணியின் இ-மெயில் மற்றும் தொடர்பு எண்ணை கண்டுபிடித்துள்ளார். பின்னர், அவரை தொடர்பு கொண்டு நேரில் சந்தித்து பையை மாற்றி கொண்டுள்ளார். நந்தகுமார் அடிப்படையில் ஒரு மென்பொறியாளர் ஆவார்.

இறுதியாக இண்டிகோவை ட்விட்டர் மூலம் தொடர்பு கொண்ட நந்தகுமார், நடந்தவற்றை விளக்கமாக கூறி, வலைத்தளத்தை மேம்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு பதிலளித்த இண்டிகோ நிறுவனம், ரகசியமான தரவுகளை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம், நந்தன் குமார் இணையதளத்தை ஹேக் செய்யவில்லை என விளக்கம் அளித்துள்ளது.


newstm.in


Next Story
Share it