Theme Check

போராட்டத்தில் பரபரப்பு.. பெண் ஆய்வாளர் மீது பெட்ரோல் ஊற்றிய இளைஞர் !!

போராட்டத்தில் பரபரப்பு.. பெண் ஆய்வாளர் மீது பெட்ரோல் ஊற்றிய இளைஞர் !!

போராட்டத்தில் பரபரப்பு.. பெண் ஆய்வாளர் மீது பெட்ரோல் ஊற்றிய இளைஞர் !!
X

கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சிக்கு உட்பட்ட தர்மகுடிக்காட்டில் அருந்ததியின மக்கள் பல ஆண்டு காலமாக வசித்து வருகின்றனர். தங்களுக்கு இலவச பட்டா வழங்க வேண்டும் என பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். எனினும் பட்டா வழங்கப்படாமல் இருந்து வருகிறது.

இந்நிலையில், அப்பகுதியை சேர்ந்த ராஜா என்ற நபர் இலவச பட்டா கோரி விருத்தாசலம் திட்டக்குடி மாநில நெடுஞ்சாலையில் தீக்குளிக்கும் போராட்டம் அறிவித்திருந்தார். அறிவித்தபடி இன்று சாலையில் தீக்குளிக்க முயற்சி செய்தார். தகவலறிந்த திட்டக்குடி காவல் ஆய்வாளர் அன்னக்கொடி தீக்குளிக்க முயற்சி செய்த ராஜாவை தடுக்க முயன்றுள்ளார். எனினும் இளைஞர் தீக்குளிக்க முயற்சித்துள்ளார். அப்போது தடுக்க கிட்ட வந்தால் உங்கள் மீதும் பெட்ரோலை ஊற்றிவிடுவேன் என ராஜா மிரட்டியதாக கூறப்படுகிறது.

ds

இதனை தொடர்ந்து ஆய்வாளர் அண்ணகொடி தடுத்த போது ராஜா ஆத்திரத்தில் காவல் ஆய்வாளர் மீது பெட்ரோலை ஊற்றியுள்ளார். இதில் ஆய்வாளர் முகத்தில் பெட்ரோல் பட்டதால் நிலைதடுமாறினார். இதனையடுத்து அவர் மீட்கப்பட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் பெட்ரோலை ஊற்றிய இளைஞர் ராஜ கைது செய்யப்பட்டார்.

newstm.in

Next Story
Share it