ஆபத்தான நிலையில் மாஸ்டர் சிவசங்கருக்கு சிகிச்சை- அதிர்ச்சியில் திரையுலகம்
ஆபத்தான நிலையில் மாஸ்டர் சிவசங்கருக்கு சிகிச்சை- அதிர்ச்சியில் திரையுலகம்

பிரபல நடன இயக்குநரான சிவசங்கர் மாஸ்டர் உயிருக்கு ஆபத்தான முறையில் சிகிச்சைப் பெற்று வருவதாக வெளியான தகவல்கள் திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடன இயக்குநராக பணிபுரிந்தவர் சிவசங்கர் மாஸ்டர். பூவே உனக்காக, விஷ்வதுளசி, வரலாறு, உளியின் ஓசை போன்ற படங்களுக்கு சிறந்த நடனாசிரியருக்கான தமிழ்நாடு அரசு திரைப்பட விருதுகளைப் பெற்றுள்ளார்.

குறிப்பாக தனுஷ் நடித்த திருடா திருடி படத்தில் இடம்பெற்ற மன்மத ராசா பாடலில் பணியாற்றியதன் மூலம் சிவசங்கரின் புகழ் பட்டிதொட்டியெங்கும் பரவியது. அஜித் நடித்த வரலாறு, சந்தானத்தின் கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, பாலாவின் பரதேசி, சூர்யா நடித்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ ஆகிய படங்களில் சிறு வேடங்களில் நடித்திருந்தார்.
இந்நிலையில் சிவசங்கர் மாஸ்டருக்கு கொரோனா ஏற்பட்டதாகவும், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால் திரைத்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனிடைேய, சிவசங்கர் மாஸ்டருக்கு சிகிச்சை அளிக்கப்படுவதற்கு அதிகம் செலவாகும் என்ற நிலையில் அவருடைய குடும்பத்தினரிடத்தில் சிகிச்சைக்கான செலவுகளை சமாளிக்க முடியாத அளவில் பணத்தட்டுப்பாடு இருப்பதாகவும் சினிமா பிஆர்ஓ நிகில் முருகன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், சிவசங்கர் மாஸ்டரின் மகன் உதவி கேட்டுள்ளார். உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள எனது அப்பாவுக்கு உதவுங்கள். தொழில்துறையினர் அவருக்கு உதவுவார்கள் என்று நம்புகிறேன். தனது தந்தையின் சிகிச்சைக்கு உதவுபவர்கள் என்னை தொலைப்பேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
தொடர்புக்கு
அஜய் கிருஷ்ணா (மகன்)
9840323415
Noted Choreographer #ShivaShankar Master affected with #COVID19 and now in critical condition. Due to expensive treatment the family is unable to pay the bills.Wishing him a speedy recovery.
— Nikil Murukan (@onlynikil) November 24, 2021
For Contact
Ajay Krishna (Son)
9840323415 pic.twitter.com/tsFeGGfQHb
newstm.in

