Theme Check

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!

தமிழகத்தில் இரு மொழிக்கொள்கைதான்.. ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்..!
X

தமிழகத்தில் இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படும் என்று தமிழக அரசு உறுதி அளித்துள்ளது.

மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையில் மும்மொழி திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் தமிழகத்தில் தொடர்ந்து இருமொழி கொள்கையே அமலில் இருக்கும் என தமிழக அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது.

இந்நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்றில், ‘கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்படுகிறது. அதுபோல, தமிழகத்தில் கூடுதலாக ஒரு மொழி சேர்ப்பதில் என்ன சிக்கல் உள்ளது..?’ என்று நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

இதற்கு பதிலளித்துள்ள தமிழக அரசு, ‘தமிழகத்தில் இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என கொள்கை முடிவு எடுக்கப்பட்டுள்ளதால் இருமொழி கொள்கையே தொடரும். மேலும், ஹிந்தி படிப்பதை யாரும் தடுக்கவில்லை’ எனவும் விளக்கம் அளித்துள்ளது.

Next Story
Share it