Theme Check

சாதனைக்கு வயது தடையில்லை..!! 70 வயதில் சாதனை படைத்த பாட்டி..!!

சாதனைக்கு வயது தடையில்லை..!! 70 வயதில் சாதனை படைத்த பாட்டி..!!

சாதனைக்கு வயது தடையில்லை..!! 70 வயதில் சாதனை படைத்த பாட்டி..!!
X

வாழ்க்கையில் சாதிப்பதற்கு வயது ஒரு தடையா இருக்கிறது என பலர் கூறி கேட்டு இருப்போம். வயசு ஆயிடுச்சி இதுக்கு மேல எப்படிபா சாதிப்பது என சொல்றவங்களுக்கு இந்த பாட்டி ஒரு சிறந்த உதாரணம்.

கேரள மாநிலத்தை சேர்ந்த 70 வயது மூதாட்டி ஆரிபா. நீச்சல் அகாடமியில் சேர்ந்து நீச்சல் கற்று கொண்ட ஆரிபா கைகளை கட்டியபடி நீச்சல் பயிற்சி எடுத்துள்ளார். இதில் நன்கு பயிற்சி பெற்றதும், அதனை பொதுமக்கள் முன்னிலையில் செய்து காட்ட ஏற்பாடு செய்யப்பட்டது.

அதன்படி ஆலுவாவில் உள்ள பெரியாறு ஆற்றில் இந்த சாதனை நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆரிபாவுடன் 11 வயது சிறுவன் மற்றும் 38 வயதான தன்யா என்ற பெண்ணும் கலந்து கொண்டனர். இவர்கள் பெரியாறு ஆற்றில் 780 மீட்டர் அகலத்தை கைகளை கட்டியபடி நீந்தி கடந்தனர். மூதாட்டி ஆரிபா, ஆற்றில் 780 மீட்டர் தூரத்தையும் 45 நிமிடத்தில் நீந்தி கடந்தார். சாதனைக்கு வயது தடையில்லை என்பதை ஆரிபா நிரூபித்து உள்ளார்.

Tags:
Next Story
Share it