Theme Check

நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை.. மருத்துவ ஆணையம் புதிய தகவல் !!

நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை.. மருத்துவ ஆணையம் புதிய தகவல் !!

நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு இல்லை.. மருத்துவ ஆணையம் புதிய தகவல் !!
X

மருத்துவப்படிப்புக்கு நீட் எனும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்கின்றனர். இந்த நுழைவுத் தேர்வுக்கு தமிழ்நாடு தொடக்கத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. கடும் எதிர்ப்பையும் மீறி மத்திய அரசு இத்தேர்வை நடத்துகிறது.

இந்த நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வுக்கு விலக்கு கோரி ஆளுநருக்கு, சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் அனுப்பப்பட்டது. இதனை ஆளுநர் திருப்பி அனுப்பினார். தமிழ்நாட்டு ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கக் கோரும் சட்ட முன்வரை, தமிழக சட்டப்பேரவையில் 2-வது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்டுள்ளது.

neet

ஆனால், அந்த சட்டத்திற்கு தமிழக ஆளுனர் இன்று வரை ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவது மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது.

இதுஒரு புறம் இருக்க, நீட் தேர்வு தொடர்பாக தேசிய மருத்துவ ஆணையரகம் புதிய தகவலை வெளியிட்டுள்ளது. அதாவது, இளநிலை மருத்துவப் படிப்புக்கு நீட் தேர்வு எழுதுவதற்கான வயது உச்சவரம்பு நீக்கப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையரகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எழுத வயது உச்சவரம்பு எதுவும் நிர்ணயம் செய்யப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளது.

தேசிய தேர்வுகள் முகமைக்கு தேசிய மருத்துவ ஆணையம் எழுதியுள்ள கடிதத்தில் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை என்று கூறியுள்ளது. நீட் தேர்வு எழுத வயது உச்ச வரம்பு என்று தேசிய மருத்துவ ஆணையச் சட்டத்தில் குறிப்பிடாத நிலையில் மீண்டும் தெளிவுப்படுத்தியுள்ளது.

இது தொடர்பான விரிவான தகவல்கள் விரைவில் முழுமையாக வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

newstm.in

Next Story
Share it