Theme Check

இனி மூடுவதற்கு வாய்ப்பே இல்லை.. டாஸ்மாக் வருவாய் ஓரே ஆண்டில் இத்தனை சதவீதம் அதிகரிப்பா?

இனி மூடுவதற்கு வாய்ப்பே இல்லை.. டாஸ்மாக் வருவாய் ஓரே ஆண்டில் இத்தனை சதவீதம் அதிகரிப்பா?

இனி மூடுவதற்கு வாய்ப்பே இல்லை.. டாஸ்மாக் வருவாய் ஓரே ஆண்டில் இத்தனை சதவீதம் அதிகரிப்பா?
X

தமிழகத்தில் மதுவிற்பனை ஓராண்டில் 11 சதவீதம் அதிகரித்துள்ளது தெரியவந்துள்ளது.

தமிழ்நாட்டில் மது விற்பனையை அரசே பொறுப்பேற்று நடத்தி வருகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் கடந்த 1983ஆம் ஆண்டு முதல் டாஸ்மாக் கடைகள் இயங்கி வருகின்றன. பல இடங்களில் டாஸ்மாக் கடைகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதனிடையே, சட்டசபை தேர்தலின்போது தி.மு.க. அளித்த வாக்குறுதிகளில் ஒன்றாக, மக்களை பாதிக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை படிப்படியாக குறைக்கப் போவதாக அறிவித்தது. ஆனாலும் டாஸ்மாக் மூலம் வரும் மது விற்பனை வருமானம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்தபடி உள்ளது.

tasmak

இந்நிலையில், தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 21,000 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது.

அதுவே, தமிழகத்தில் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் நவம்பர் வரை 19,000 கோடி ரூபாய் கிடைத்துள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் 2020ஆம் ஆண்டை காட்டிலும், அடுத்தாண்டு டாஸ்மாக் வருவாய் 11 சதவீதம் அதிகரித்துள்ளது என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழக அரசுக்கு வருவாய் அதிகரித்து வரும் நிலையில், டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்ற அறிவிப்பு சாத்தியமாகுமா என்பது கேள்விக்குறிதான்.


newstm.in

Next Story
Share it