எங்க நாட்ல கொரோனா வைரசே கிடையாது! கிம் பெருமிதம்!
எங்க நாட்ல கொரோனா வைரசே கிடையாது! கிம் பெருமிதம்!

உலகம் முழுவதும் கொரோனா பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் நிலையில் வடகொரியாவில் கொரோனாவே இல்லை என வடகொரிய அதிபர் கிம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆனால் உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்தப்பட்டுள்ள கிழக்கு ஆசிய நாடான வட கொரியா, கொரோனா வைரஸ் பரவ தொடங்கியது முதலே தங்கள் நாட்டில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என கூறி வருகிறது. ஆனால் மோசமான சுகாதார கட்டமைப்பைக் கொண்ட வட கொரியாவில் வைரஸ் பாதிப்பு இல்லை என கூறப்படுவது நம்ப முடியாத ஒன்று என சர்வதேச நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனினும் கடுமையான கட்டுப்பாடுகள் மூலம் வைரஸ் பரவலை தடுத்ததாக வடகொரியா விளக்கம் அளித்துள்ளது.

இந்நிலையில் இப்போது வரை தங்கள் நாட்டில் கொரோனா இல்லை என வடகொரியா உலக சுகாதார அமைப்பிடம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உலக சுகாதார அமைப்பின் வடகொரியாவுக்கான பிரதிநிதி விடுத்த செய்திக்குறிப்பில் 2020 ஏப்ரல் 1ல் வடகொரியாவில் 23,121 பேருக்கு செய்யப்பட்ட கொரோனா பரிசோதனையில் ஒருவருக்கு கூட வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே போல் 2021லும் மார்ச் 26 முதல் ஏப்ரல் 1 வரை செய்த பரிசோதனை முடிவுகளையும் உலக சுகாதார அமைப்பிடம் வடகொரியா வழங்க மறுக்கிறது எனவும், எத்தனை பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள், அறிகுறிகளுடன் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பதைக் கூற அரசு மறுக்கிறது” எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
சமீபத்தில் வடகொரிய தலைநகர் பியாங்யாங்கில் நடைபெற்ற அரசியல் மாநாட்டில் பேசிய அந்நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன், ஏற்கனவே சர்வதேச நாடுகளின் பொருளாதார தடைகளால் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் கொரோனா கட்டுப்பாடுகளால் உருவான பொருளாதார இழப்பால் வடகொரியா மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

