Theme Check

இவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இல்லை.. மத்திய சுகாதார அமைச்சகம்..!

இவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இல்லை.. மத்திய சுகாதார அமைச்சகம்..!

இவர்களுக்கு தடுப்பூசி போடும் திட்டம் இல்லை.. மத்திய சுகாதார அமைச்சகம்..!
X

நாடு முழுவதும் கொரோனா தொற்றை தடுக்க கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கப்பட்டது. ஒரு வருடம் முடிவடைந்த நிலையில், இதுவரை 158 கோடியே 4 லட்சத்து 41 ஆயிரத்து 770 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.

இந்நிலையில், 15 முதல் 18 வயது வரையிலானவர்களுக்கு தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 3-ம் தேதி தொடங்கியது. இந்த பிரிவினரில் 7 கோடியே 40 லட்சத்து 57 ஆயிரம் பேர் உள்ளனர்.

இவர்களில் 3 கோடியே 59 லட்சத்து 30 ஆயிரத்து 929 பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 4 வாரங்களில் அவர்களுக்கு 2-வது டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.

இந்த நிலையில், 12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதம் தொடங்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது.

இதனை, தடுப்பூசிக்கான தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக்குழு தலைவர் டாக்டர் என்.கே.அரோரா தெரிவித்தார். அவர் கூறுகையில், “12 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகள் மார்ச் மாதம் தொடங்க வாய்ப்புள்ளது. அதுசார்ந்த கொள்கை ரீதியிலான முடிவை அரசு மேற்கொள்ளும். அந்த வயது வரம்பில் சுமார் 7.5 கோடி சிறுவர்கள் உள்ளனர்” என்றார்.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு மத்திய சுகாதார அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

அதில், ‘12 வயது முதல் 14 வயதிலான சிறுவர்களுக்கு இப்போதைக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் இல்லை. இது தொடர்பாக அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை’ என்று தெரிவித்துள்ளது.

மார்ச் மாதத்தில் 12 - 14 வயது சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தொடங்கும் என தகவல் வெளியான நிலையில் மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

Next Story
Share it