Theme Check

பெயரை மாற்றி அழைப்பதால் எந்த பயனும் இல்லை..! - அன்புமணி

பெயரை மாற்றி அழைப்பதால் எந்த பயனும் இல்லை..! - அன்புமணி

பெயரை மாற்றி அழைப்பதால் எந்த பயனும் இல்லை..! - அன்புமணி
X

“எங்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம். பெயரை மாற்றி அழைப்பதால் எந்த பயனும் இல்லை, எதுவும் நடக்கப் போவதில்லை” என, அன்புமணி ராமதாஸ் கூறினார்.

ஆண்டுதோறும், வேளாண் நிதி நிலை அறிக்கை மற்றும் பொது நிழல் நிலை நிதிநிலை அறிக்கைகளை பாமக வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் இன்று, 2021- 2022ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை வெளியிட்டது

இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி, “எங்களைப் பொறுத்தவரை, மத்திய அரசு என்றுதான் நாங்கள் அழைப்போம். பெயரை மாற்றி அழைப்பதால் எந்த பயனும் இல்லை, எதுவும் நடக்கப்போவதில்லை.திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல், டீசல் விலையை குறைப்பதாக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளித்திருந்தனர். தற்போது, தேதி ஏதும் நாங்கள் சொல்லவில்லை என்கின்றனர். அது ஆக்கப்பூர்வமான கருத்து இல்லை.

தற்போதைய சூழ்நிலையில், ஒன்று அல்லது இரண்டு ரூபாய் வரை குறைக்கலாம். தமிழக அரசு பொருளாதார நிபுணர்கள் குழு அமைத்துள்ளதை நாங்கள் வரவேற்கிறோம்” எனக் கூறினார்.

Tags:
Next Story
Share it