Theme Check

எங்கள் ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை - சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த முதல்வர்..!!

எங்கள் ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை - சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த முதல்வர்..!!

எங்கள் ஆட்சியில் ஊழலுக்கு இடமில்லை - சுகாதாரத்துறை அமைச்சரை பதவி நீக்கம் செய்த முதல்வர்..!!
X

பஞ்சாப் மாநிலத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து, கடந்த மார்ச் 16-ம் தேதி பகவந்த் மான் முதல்வராக பதவியேற்றார். அவரது அமைச்சரவையில், விஜய் சிங்லா என்பவர் சுகாதாரத்துறை அமைச்சராக பதவி வகித்து வருகிறார்.

vijay-singla

இந்நிலையில், சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா மீது ஊழல் புகார் எழுந்தையடுத்து அவரை முதல்வர் பகவந்த் மான் பதவி நீக்கம் செய்துள்ளார். சுகாதாரத்துறை அமைச்சர் விஜய் சிங்லா அரசு ஒப்பந்தங்களுக்கு அதிகாரிகளிடம் 1 சதவீத கமிஷன் கோரியதாக கூறப்படும் நிலையில், அவர் மீதான ஊழல் புகார் உறுதியானது.

இதுகுறித்து பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் கூறுகையில், ஒரு சதவிகிதம் ஊழலைக் கூட பொறுத்துக் கொள்ள முடியாது. மக்கள் மிகுந்த நம்பிக்கையுடன் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வாக்களித்துள்ளனர். ஊழலுக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார்.

Bhagwant-Mann

முன்னதாக, அரவிந்த் கெஜ்ரிவால் கடந்த 2015-ம் ஆண்டு தனது அமைச்சர் ஒருவரை ஊழல் குற்றச்சாட்டில் பதவி நீக்கம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:
Next Story
Share it