Theme Check

பணம் இருந்தும் சிகிச்சை இல்லை.. மருத்துவமனை வாசலில் 3 மணி நேரம் காத்திருந்து மரணித்த இளம்பெண் !!

பணம் இருந்தும் சிகிச்சை இல்லை.. மருத்துவமனை வாசலில் 3 மணி நேரம் காத்திருந்து மரணித்த இளம்பெண் !!

பணம் இருந்தும் சிகிச்சை இல்லை.. மருத்துவமனை வாசலில் 3 மணி நேரம் காத்திருந்து மரணித்த இளம்பெண் !!
X

கொரோனா வைரஸின் 2ஆவது அலை தற்போது ஒட்டுமொத்த இந்தியாவையும் ஆட்டிபடைத்து வருகிறது. அனைத்து மாநிலங்களிலும் மக்கள் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி வருகின்றனர். வடமாநிலங்களில் ஆக்சிஜன் தட்டுப்பாட்டால், மருத்துவமனைகள் கிடைக்காததால் பலரும் இறந்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஆந்திராவில் இதுபோன்ற நடந்த ஒரு சம்பவம் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள ஸ்ரீகாகுளம் நகரை சேர்ந்த அஞ்சலி என்பவர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி பிரபல தனியார் மருத்துவமனைக்கு உறவினர்கள் அழைத்து சென்றனர். அஞ்சலியை சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்க ஒப்புக்கொண்ட நிர்வாகம் முதலில் பணம் செலுத்த வேண்டும் என்று கூறியது.

அப்போது அவருடைய அக்கவுண்டில் மட்டுமே பணம் இருந்தது. இதனால் ஆன்லைன் மூலம் உடனடியாக பணம் செலுத்துகிறோம் என அஞ்சலியின் உறவினர்கள் மருத்துவமனை ஊழியர்களிடம் தெரிவித்தனர். ஆனால் இங்கு பணம் ரொக்கமாக மட்டுமே வாங்கப்படும் மருத்துவமனை ஊழியர்கள் உறுதியாக தெரிவித்துவிட்டனர்.

எனவே வேறு வழி இல்லாத நிலையில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான அஞ்சலியை மருத்துவமனையின் வெளியே உட்கார வைத்துவிட்டு, குடும்ப உறுப்பினர்கள் பணம் பெற்றுவர சென்றுவிட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கு பிறகு பணத்துடன் உறவினர்கள் வந்து பார்த்தப்போது, உறவினர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மருத்துவமனைக்கு வெளியேவே அவர் பரிதாபமாக மரணமடைந்தார்.

அவருடைய உடலை அங்கிருந்து அப்புறப்படுத்த உதவிகளை செய்ய யாரும் முன் வராத நிலையில் தவித்துக்கொண்டிருந்தனர். இதனை அறிந்த அந்த வழியாக சென்று கொண்டிருந்த செய்தியாளர்கள் இரண்டு பேர் கொரோனா பாதுகாப்பு உடையணிந்து மரணம் அடைந்த அஞ்சலியின் உடலை அவருடைய உறவினர்களுடன் சேர்ந்து வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.

newstm.in

Tags:
Next Story
Share it