மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தை இல்லை.. அற்புதம்மாள் பேட்டி..!
மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தை இல்லை.. அற்புதம்மாள் பேட்டி..!

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வந்த பேரறிவாளன் விடுதலை செய்யப்படுவதாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது.
ஆளுநர் முடிவெடுக்க தாமதப்படுத்தியதால் 142-வது சட்டப்பிரிவைப் பயன்படுத்தி உச்சநீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியிருப்பதாக தெரிவித்திருக்கிறது. நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான 3 பேர் கொண்ட அமர்வின் விசாரணைக்குப் பிறகு இந்தத் தீர்பு வழங்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், தன் மகனின் விடுதலைக்காக பல ஆண்டுகளாக பலகட்டப் போராட்டங்களை சந்தித்த அவரின் தாயார் அற்புதம்மாள் இதுகுறித்து கூறுகையில், “பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டது மகிழ்ச்சியாக உள்ளது. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.
Next Story

