Theme Check

இவர்கள் தான் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்..!

இவர்கள் தான் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்..!

இவர்கள் தான் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.. அமைச்சர் சுப்பிரமணியன் தகவல்..!
X

“தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்” என்று, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

“சென்னையில் 1,600 இடங்களில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணிவரை தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. மேலும், 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்திக்கொள்ள தனி இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் இதுவரை 2,580 ஊராட்சிகளில் 100 சதவீதம் முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 94.19 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர். மேலும், 1,71,616 சிறுவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதித்த 6 சதவீதம் பேர் தான் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் மீதம் உள்ள 94 சதவீதம் பேர் வீட்டுத் தனிமையில் இருக்கின்றனர். மேலும், தமிழகத்தில் கொரோனா இறப்பு சதவீதம் மிகக் குறைவாக இருப்பது மன நிறைவாக உள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களால்தான் தற்பொழுது இறப்பு விகிதம் ஏற்படுகிறது. தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் தான் கொரோனா பாதிப்பால் உயிரிழக்கின்றனர்.

தடுப்பூசி செலுத்திக் கொண்டதால் பின்விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று எந்த புகாரும் வரவில்லை. எனவே, தைரியமாக அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

அதே சமயம், உருமாற்றம் அடைந்த கொரோனா உட்பட அனைத்து வகை கொரோனா தொற்றுக்கும், முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவச சிகிச்சை உண்டு” என்று தெரிவித்தார்.

Next Story
Share it