நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவர்களுக்கு செம டிமாண்ட்!!
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இவர்களுக்கு செம டிமாண்ட்!!

வேலை செய்யும் இடம் மற்றும் சொந்த ஊரில் ஓட்டுரிமை இருப்பவர்களுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் செம டிமாண்ட் இருக்கிறது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் இரண்டு வாக்கு இருப்பவர்களுக்கு இருக்கும் மவுசு.
பணிநிமித்தமாக சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் வசித்துவரும் பல்வேறு ஊர்காரர்களை, அவர்களின் சொந்த ஊரை சேர்ந்த வேட்பாளர்கள் வாக்களிக்க வருமாறு அழைக்கின்றனர்.
தங்களது அழைப்பை ஏற்று ஓட்டு போட சொந்த ஊருக்கு வர சம்பந்தம் தெரிவிப்பவர்களுக்கு பயண செலவுக்கான பணத்தை ஜிபே செய்வது, வேன் ஏற்பாடு செய்வதென பல வேட்பாளர்கள் அவர்களை சிறப்பாக கவனித்து வருகின்றனர்.

எம்பி, எம்எல்ஏ தேர்தலைவிட உள்ளாட்சித் தேர்தலில் ஒவ்வொரு ஓட்டும் வெற்றிக்கு மிக முக்கியம். ஏனென்றால் பெரிய கட்சிகள் தொடங்கி சுயேச்சைகள் வரை ஏராளமானோர் களத்தில் இருப்பார்கள். அதனால் வாக்குகள் மிக முக்கியம்.
சென்னை போன்ற பெருநகரங்களில் வசிக்கும் மக்கள், உள்ளூர் வேட்பாளர்கள் மத்தியில் தனி முக்கியத்துவம் பெற்று வருகின்றனர். வார்டு கவுன்சிலர் தேர்தலில் வெற்றியை தீர்மானிக்கும் இடத்தில் இருப்பதால் அவர்களுக்கு அத்தனை மவுசு.
இவர்களில் பலருக்கு பணிநிமித்தமாக வசிக்கும் பெருநகரங்களில் ஒரு ஓட்டும், சொந்த ஊரில் ஒரு ஓட்டும் என்று இரட்டை வாக்குரிமை இருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in

