இன்று முதல் இவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்!
இன்று முதல் இவர்களும் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம்!

45 வயதை கடந்தவர்கள் அனைவரும் இன்று முதல் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி செலுத்தும் பணிகள் கடந்த ஜனவரி 16ஆம் தேதி நாடு முழுவதும் தொடங்கியது. முதற்கட்டமாக மருத்துவப் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
அதனைத் தொடர்ந்து முன் களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கப்பட்டது. மூன்றாவது கட்டமாக 60 வயதை கடந்த முதியவர்களுக்கும் ,45 வயதை கடந்த இணை நோய் உள்ளவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதுவரை நாடு முழுவதும் 6.11 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இன்று முதல் (01.04.21) 45 வயதை கடந்த அனைவரும், தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஆன்லைன் மூலமாக பெயர்களை முன்பதிவு செய்து, தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். அப்போது ஆதார், ரேஷன் கார்டு உள்ளிட்ட, ஏதேனும் ஒரு அடையாள அட்டை எடுத்துச் செல்வது அவசியம்.
ஆன்லைனில் பதிவு செய்ய இயலாதவர்கள், தங்கள் பகுதியில் உள்ள தடுப்பூசி முகாமிற்கு மாலை, 3:00 மணிக்கு பின், புகைப்பட அடையாள அட்டையுடன் நேரில் சென்று, பெயர்களை பதிவு செய்யலாம்,
தடுப்பூசி செலுத்திக் கொண்ட பிறகும் சிலருக்கு தொற்று ஏற்பட்டது. இதுகுறித்து பதில் அளித்துள்ள மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், இது மிக அரிதானது என்றும், இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்ட இரு வாரங்களில், முழுமையாக நம்மை பாதுகாக்கும் நிலை உருவாகும் எனவும் கூறினார்.
அதுவரை, மக்கள் பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
newstm.in

