Theme Check

என்னை ஏமாற்றி விட்டனர்.. குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் கதறிய சோகம்..!!

என்னை ஏமாற்றி விட்டனர்.. குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் கதறிய சோகம்..!!

என்னை ஏமாற்றி விட்டனர்.. குண்டு பாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் கதறிய சோகம்..!!
X

துப்பாக்கி குண்டுபாய்ந்து உயிரிழந்த சிறுவனின் தாய் பழனியம்மாள் கூறியதாவது, “எனது மகனை காப்பாற்றி விடுவோம், காப்பாற்றி விடுவோம் என்று கூறினார்கள். அந்த நம்பிக்கையில் நாங்கள் இருந்தோம். ஆனால் கடைசியில் காப்பாற்ற முடியாமல் போய் விட்டது. நேற்று வரை கை, கால் அசைகிறது என்று கூறினார்கள். இப்போது ஏன் அசைய வில்லை.

எனக்கு இன்னொரு மகள் உள்ளார். அவள் அண்ணனை கொண்டு வந்து நிறுத்துங்கள் என கூறினால் நான் எங்கு செல்வேன்? அந்த குழந்தைக்கும் ஏதாவது ஆகி விட்டால் நான் என்ன செய்வது?

மருத்துவமனைக்கு கொண்டு வந்த அன்றே காப்பாற்ற முடியாது என கூறி இருந்தால் நாங்கள் எப்படியாவது பிச்சை எடுத்தாவது எங்காவது கொண்டு சென்று குழந்தையை காப்பாற்றி இருப்போம். அவனை காப்பாற்றி விடுவோம் என்று என்னை ஏமாற்றி விட்டனர். கடைசி நேரத்தில் எனது மகனை தொட்டு பார்க்கக்கூட என்னை அனுமதிக்கவில்லை.

எனது மகனுக்கு நேர்ந்த கதி இன்னொருவருக்கு ஏற்படக்கூடாது. துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை நிரந்தரமாக மூட வேண்டும்.” என்று கூறினார்.

Next Story
Share it