Theme Check

பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டும்; ஆதார் கொடுக்கவேண்டும் -உச்சநீதிமன்றம்

பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டும்; ஆதார் கொடுக்கவேண்டும் -உச்சநீதிமன்றம்

பாலியல் தொழிலாளர்களை கண்ணியத்துடன் நடத்தவேண்டும்; ஆதார் கொடுக்கவேண்டும் -உச்சநீதிமன்றம்
X

பாலியல் தொழிலாளர்களுக்கு அரசின் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்பது தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதி நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய் மற்றும் ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று உத்தரவு பிறப்பித்த நீதிபதி நாகேஸ்வர ராவ் அமர்வு, ‘தொழிலை வைத்து யாரையும் பிரித்துப் பார்க்க முடியாது. அவர்களும் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும்.
Treat sex workers with dignity and give them support
அவர்கள் அனைவருக்கும் அதற்கான உரிமை உள்ளது என்ற அடிப்படையில், பாலியல் தொழிலாளர்கள் கண்ணியத்துடன் நடத்தப்பட வேண்டும் என நீதிமன்றம் கருதுகிறது.

கொரோனா பாதிப்பின் போது இந்தியாவில் 9 லட்சம் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதை நீதிமன்றம் அறிகிறது.

அதன் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பாலியல் தொழிலாளர்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு ஆதார் அடையாள அட்டை வழங்க வேண்டும்’ என உத்தரவிட்டு, இந்த வழக்கை முடித்து வைத்தனர்.
Next Story
Share it