Theme Check

என்னையே மதம் மாற்றப் பார்த்தார்கள்.. மதுரை ஆதீனம் பகீர் தகவல்..!

என்னையே மதம் மாற்றப் பார்த்தார்கள்.. மதுரை ஆதீனம் பகீர் தகவல்..!

என்னையே மதம் மாற்றப் பார்த்தார்கள்.. மதுரை ஆதீனம் பகீர் தகவல்..!
X

“என்னையே மதம் மாற்றுவதற்கு முயற்சி செய்தார்கள். ஆனால் நான், அதிலிருந்து தப்பித்து வந்து விட்டேன்” என, மதுரை ஆதீனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, மதுரை ஆதீனம் ஹரிஹர தேசிக பரமாச்சாரிய சுவாமிகள் தனியார் யூ-டியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “மதுரை ஆதீனமாக நான் பொறுப்பேற்றது முதல் மடத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன்.

மடம் மற்றும் கோவில் பூஜை ஆகியவற்றில் தமிழக அறநிலையத்துறையின் தலையீடு அதிகமாக உள்ளது. இதையெல்லாம் விரைவில் கலைய வேண்டும்.

இந்து கோவில்கள் மற்றும் மடங்களுக்கு மட்டும் அறநிலையத்துறையின் மூலம் கடிவாளம் போடப்படுகிறது. ஆனால், மற்ற மதங்களுக்கு இப்படியான கட்டுப்பாடுகள் கிடையாது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, அறநிலையத்துறை சார்பில் பிரார்த்தனை எல்லாம் சரியாக நடக்கிறது. திமுகவில் சிலர் தெய்வங்களை வழிபடுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது. இப்போது யாராவது இந்து என்று சொன்னாலே இந்துத்துவா என்றே பொருள் ஆகிவிட்டது.

தமிழக மடங்கள் சுயமாக இயங்க அனுமதிக்கப்பட வேண்டும். போப் சொல்வது அமெரிக்காவில் தெய்வ வாக்காக கருதப்படுகிறது. ஆனால் நமது நாட்டில் அப்படி எதுவும் இல்லை.

தஞ்சை மாணவியின் தற்கொலை செய்தி கேட்டு துடித்துப் போனேன். அதேபோல், கன்னியாகுமரியில் உள்ள ஒரு கிறிஸ்தவ பள்ளியில் பயின்ற மாணவி விபூதியிட்டு சென்றதற்காக தலைமையாசிரியரால் தாக்கப்பட்டார். அதை அறிந்து நான் நேரடியாக சென்று போராட்டம் நடத்தி அவர்கள் மன்னிப்பு கேட்டார்கள்.

ஒருவரின் மதமாற்றம் என்பது கொள்கை பிடித்து மாற வேண்டுமே தவிர, பணம், சலுகைக்காக மாறக் கூடாது. அதிக அளவில் பள்ளிக்கூடங்களில் மதமாற்றம் நடக்கிறது. ஒரு கட்டத்தில் என்னையே மதமாற்றம் செய்ய முயற்சி செய்தார்கள்.

பகவதி லட்சுமணன் என்ற எனது பெயரையே மாற்ற முயற்சிசெய்து, அதிலிருந்து நான் தப்பித்து வந்து விட்டேன். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, கட்டாய மதமாற்றத்தை தடுக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

Next Story
Share it