Theme Check

கெட்ட கனவுகள் வந்ததால் திருடிய சாமி சிலைகளை ஒப்படைத்த திருடர்கள்!!

கெட்ட கனவுகள் வந்ததால் திருடிய சாமி சிலைகளை ஒப்படைத்த திருடர்கள்!!

கெட்ட கனவுகள் வந்ததால் திருடிய சாமி சிலைகளை ஒப்படைத்த திருடர்கள்!!
X

கோயிலில் சாமி சிலைகளை திருடிய பிறகு கெட்ட கனவுகள் வந்ததால், திருடர்கள் சிலையை திரும்ப வைத்துவிட்டு கடவுளுக்கு மன்னிப்பு கடிதம் எழுதியுள்ளனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தரகூட் பகுதியில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த விஷ்ணு கோயில் உள்ளது. இந்த கோயிலில் இருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான சாமி சிலைகள் திருடப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக கோயில் பூசாரி புகார் அளித்த நிலையில், காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தது.

idols 2

இந்நிலையில், கடந்த ஞாயிற்றுகிழமை பூசாரியின் வீட்டின் அருகே சாக்கு பை ஒன்று இருந்துள்ளது. அதில், தொலைந்து போன 16 சிலைகளில் 14 சிலைகள் இருந்தன. அத்துடன் அதில் ஒரு குறிப்பு சீட்டும் இருந்தது.


அதில், சிலையை திருடிய பின்னர் தங்களுக்கு மோசமான கனவுகள் வந்ததாகவும், அதனால் பயந்து போய் சிலைகளை திரும்ப ஒப்படைப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர்.

idols 2

அத்துடன் தாங்கள் செய்த தவறை இறைவன் மன்னிக்க வேண்டும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். இந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்ட நிலையில், அந்த சிலைகளை கைப்பற்றி கோவிலில் பத்திரமாக வைத்தனர்.

அத்துடன் இச்சம்பவம் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தவும் காவல்துறை முடிவெடுத்துள்ளது. கிடைத்துள்ள தடயங்கள் மூலம் திருடர்கள் விரைவில் பிடிபடுவார்கள் எனவும் காவல்துறை நம்பிக்கை தெரிவித்துள்ளது.

newstm.in

Next Story
Share it