திருவள்ளுவர் தினம்.. வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் மரியாதை..!
திருவள்ளுவர் தினம்.. வள்ளுவர் கோட்டத்தில் முதல்வர் மரியாதை..!

திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள திருவள்ளுவர் சிலைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தொடர்ந்து, திருக்குறள் ஓவியக் காலப்பேழை புத்தகத்தை ஸ்டாலின் வெளியிட்டார். அதோடு குறளோவியம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
குறளோவியம் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.50ஆயிரம், 2ம் பரிசாக ரூ.30ஆயிரம், 3ம் பரிசாக ரூ.20ஆயிரம் வழங்கினார். குறளோவியம் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 3 கல்லூரி மாணவர்களுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை முதல்வர் வழங்கினார்.
Next Story

