Theme Check

அரசு ஊழியர்களுக்கு இது நல்ல காலம்.. விரைவில் அகவிலைப்படி உயர்வு !

அரசு ஊழியர்களுக்கு இது நல்ல காலம்.. விரைவில் அகவிலைப்படி உயர்வு !

அரசு ஊழியர்களுக்கு இது நல்ல காலம்.. விரைவில் அகவிலைப்படி உயர்வு !
X

தற்போதைய சூழலில் மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் ஒரு மகிழ்ச்சியான செய்தி மத்திய அரசிடம் இருந்து வெளியாக உள்ளது. அதாவது, அகவிலைப்படி உயர்வுக்காக மத்திய அரசு ஊழியர்கள் பல வாரங்களாக காத்திருக்கின்றனர். தற்போது அரசு ஊழியர்களுக்கு 31% அகவிலைப்படி வழங்கப்படுகிறது.

இம்மாதம் ஹோலி பண்டிகை வரவுள்ள நிலையில் அகவிலைப்படி உயர்வு பற்றி அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியது. அதேநேரத்தில், அரசுக்கு பல்வேறு நிதி நெருக்கடி இருப்பதால் அகவிலைப்படி உயர்வு குறித்த தகவல் வெளியாவதில் தாமதம் ஏற்படும் என்று கூறப்பட்டது.

money

இந்நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் அகவிலைப்படி உயர்வு குறித்து அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இதன்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 34% ஆக உயரும். இதனால் பல லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்கள் பயனடைவார்கள்.
அகவிலைப்படி உயர்வு என்பது பணவீக்கத்தை சமாளிப்பதற்காக வழங்கப்படும் தொகையாகும். தற்போது இந்தியாவில் மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் பணவீக்கம் மிகக் கடுமையாக உயர்ந்துள்ளது. இதுமட்டுமல்லாமல், சர்வதேச மார்க்கெட்டில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
money
கச்சா எண்ணெய் விலை உயர்வாலும், ஐந்து மாநில சட்டமன்ற தேர்தல் மார்ச் 8ஆம் தேதி முடிவுக்கு வருவதாலும் விரைவில் பெட்ரோல், டீசல் விலை கடுமையக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தால் பணவீக்கம் மேலும் உயரும். எனவே, அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு இம்மாதமே வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

Tags:
Next Story
Share it