இது கணவன்- மனைவி சண்டை தான்.. விவகாரத்து இல்லை.. தனுஷின் தந்தை பரபரப்பு பேட்டி !
இது கணவன்- மனைவி சண்டை தான்.. விவகாரத்து இல்லை.. தனுஷின் தந்தை பரபரப்பு பேட்டி !

தனுஷ் - ஐஷ்வர்யா விவகாரத்து செய்யவில்லை என்று தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா அளித்துள்ள பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவாராக உள்ள தனுஷ், இந்தி, ஹாலிவுட் என அடுத்தடுத்து உயர்ந்து வருகிறார். இதனால் இவருக்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் சர்வதேச அளவில் கூடியது.
இந்த நிலையில், கடந்த திங்கட்கிழமை இரவு நடிகர் தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவைப் பகிர்ந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். அதில் தானும் தனது மனைவி ஐஸ்வர்யாவும் திருமணமாகி 18 ஆண்டுகள் கழித்து சுமூகமாக பிரிய முடிவெடுத்திருப்பதாக அறிவித்தார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மகளான ஐஸ்வர்யாவும் இதே போன்ற வார்த்தைகள் அடங்கிய அறிவிப்பை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தார்.

இருவரும் ஒன்றாக வெளியிட்ட அந்த அறிக்கையில், 18 ஆண்டுகள் நண்பர்களாக, தம்பதிகளாக, பெற்றோர்களாக மற்றும் நலம் விரும்பிகளாக எங்கள் இருவரையும் ஒன்றாக இணைத்த இந்த பயணம் வளர்ச்சி, புரிதல், அனுசரிப்பு என இருந்தது.
இன்று எங்கள் பாதைகள் பிரியும் ஓரிடத்தில் நிற்கிறோம். நாங்கள் இருவரும் பிரிவதாக பரஸ்பரம் முடிவு செய்துள்ளோம். மேலும் எங்களை தனிநபர்களாக சிறப்பாக புரிந்து கொள்ள நேரம் ஒதுக்குகிறோம். தயவு செய்து எங்கள் முடிவை மதித்து, இதை சமாளிக்க தேவையான தனி மனித சுதந்திரத்தை எங்களுக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறோம், எனக் குறிப்பிட்டிருந்தனர்.

தனுஷ் - ஐஷ்வர்யாவின் பிரிவு கோலிவுட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், இருவரையும் சமாதானப்படுத்தும் முயற்சிகள் ஒருபக்கம் நடந்து வருகின்றன. உறவினர்கள், நண்பர்கள் என பலரும் இதற்கான முயற்சியில் உள்ளனர். இந்நிலையில் தனுஷின் தந்தையான இயக்குனர் கஸ்தூரி ராஜா இந்த விவகாரம் குறித்து பேட்டி அளித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, கருத்து வேறுபாடு காரணமாக மட்டுமே தனுஷும், ஐஷ்வர்யாவும் சண்டை போட்டுக் கொண்டுள்ளனர். இது கணவன் - மனைவி இடையே வழக்கமாக நடைபெறும் குடும்ப சண்டைதான். இது விவகாரத்து அல்ல. தனுஷும் ஐஷ்வர்யாவும் தற்போது சென்னையில் இல்லை. இருவரும் ஐதராபாத்தில் இருக்கிறார்கள். இருவரையும் போனில் தொடர்பு கொண்டு பேசி, சில அறிவுரைகளை வழங்கியுள்ளேன், என கூறினார்.
newstm.in

