Theme Check

சிறந்த நிர்வாகத்திற்கு இதுதான் எடுத்துக்காட்டு.. கலெக்டர்களுக்கு முதல்வர் அட்வைஸ்..!

சிறந்த நிர்வாகத்திற்கு இதுதான் எடுத்துக்காட்டு.. கலெக்டர்களுக்கு முதல்வர் அட்வைஸ்..!

சிறந்த நிர்வாகத்திற்கு இதுதான் எடுத்துக்காட்டு.. கலெக்டர்களுக்கு முதல்வர் அட்வைஸ்..!
X

சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்பிகள் பங்கேற்கும் 3 நாள் மாநாடு நேற்று தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த மாநாட்டை தொடங்கி வைத்தார்.

இன்று (11-ம் தேதி) 2-வது நாளாக கலெக்டர்கள் கலந்துகொண்ட மாநாடு தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற கலெக்டர்களை தலைமைச் செயலர் இறையன்பு வரவேற்று பேசினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “மாவட்ட கலெக்டர்கள் தங்களுடைய மாவட்டங்களில் நிறைவேற்றக் கூடிய திட்டங்கள் குறித்த கள நிலவரத்தை விரிவாக எடுத்துரைக்க வேண்டும்.

இந்த அரசினுடைய திட்டங்களை மக்களுக்கு சென்றடைகிறதா என்பதை உறுதி செய்வது குறித்து அனைவரும் உங்களுடைய கருத்துக்களை இணைந்து தெரிவிக்க வேண்டும்.

எங்களுக்கும் உங்களுக்கும் அதாவது, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் மக்கள்தான் எஜமானர்கள் என்பதை யாரும் மறந்து விடக்கூடாது.

ஆகவே ஒரு ரூபாய் செலவு செய்தால் அந்த ஒரு ரூபாய் சிந்தாமல் சிதறாமல் கடைக்கோடி மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

அதுதான் சிறந்த நிர்வாகத்திற்கு எடுத்துக்காட்டாக அமைய முடியும். ஒவ்வொரு மாவட்டத்திலும் நிறைவேற்ற வேண்டிய சிறப்பு திட்டங்கள் குறித்து மாவட்ட ஆட்சியர்கள் கருத்து தெரிவிக்க வேண்டும்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு பொருட்கள் கிடைக்கிறது, அது மஞ்சளா இருக்கலாம், இயற்கை வளங்கள் ஆக இருக்கலாம்.

அவற்றை எப்படி மார்க்கெட் செய்வது அரசுக்கு வருமானம் பெறுவது குறித்து விவசாயிகள் ,தொழிலாளர்கள், சிறு தொழில் குறுந்தொழில் அனைவருக்கும் பயனளிக்கும் கூடிய திட்டங்கள் குறித்து கருத்துக்களை கலெக்டர்கள் தெரிவிக்க வேண்டும்.

நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான நிர்வாகம் என்பதை மனதில் வைத்து நீங்கள் ஆலோசனையை சுதந்திரமாக கூறலாம். அந்த வகையில் கலெக்டர்களின் கருத்துக்களை கேட்பதற்கு ஆர்வமாக இருக்கிறேன்” என்று கூறினார்.

Next Story
Share it