Theme Check

இதுதான் துணிச்சல்.. பிரதமரின் கேள்வியால் ஆச்சரியம் அடைந்த தமிழக டிஜிபி..

இதுதான் துணிச்சல்.. பிரதமரின் கேள்வியால் ஆச்சரியம் அடைந்த தமிழக டிஜிபி..

இதுதான் துணிச்சல்.. பிரதமரின் கேள்வியால் ஆச்சரியம் அடைந்த தமிழக டிஜிபி..
X

சென்னை அண்ணாநகரைச் சேர்ந்த இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி, சமீபத்தில் மழை வெள்ளத்தின் போது இளைஞர் ஒருவரை காப்பாற்றுவதற்காக அவரை தோளில் தூக்கி ஆட்டோ ஒன்றில் ஏற்றி வைத்தார். இந்த நடவடிக்கை அனைவரையும் நெகிழச் செய்தது. சிறிது நேரத்தில் ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டா என ராஜேஷ்வரி பேசுபொருளானார். இந்திய அளவில் ப்ருட், வயர் போன்ற மிகப்பெரிய வலைதளங்கள் அவரது செயலை பாராட்டின.

இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரலான நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியிருந்தார். இந்தநிலையில, பிரதமர் மோடி அவரை பற்றி விசாரித்துள்ளார். உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இன்று இந்திய அளவிலான டிஜிபி மற்றும் ஐஜி மாநாடு நடந்தது

rajeshwari-stalin

இந்த மாநாட்டில் பிரதமர் கலந்து கொண்டார். தமிழகத்திலிருந்து டிஜிபி சைலேந்திரபாபு கலந்து கொண்ட நிலையில் அவரிடம் பிரதமர் திடீரென இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி நல்லா இருக்காங்களா என்று கேட்டிருக்கிறார். இதனைக்கேட்ட டிஜிபி சைலேந்திரபாபு பெரும் ஆச்சரியம் அடைந்தார்.

பிச்சை எடுப்பது போல தொழிற்சாலைக்குள் புகுந்து உலோகங்கள் திருடும் பெண்கடிஜிபியிடம் கேட்டதல்லாமல் விழாவில் பேசிய பிரதமர் இந்திய அளவில் போலீஸார் செயல்பாடுகள், தியாகம், அவர்கள் ஆற்றிய வீரஞ்செரிந்த பணிகள், மக்கள் பணி போலீஸ் முன்னுள்ள சவால்கள் உள்ளிட்டவற்றை பேசியுள்ளார். அப்போதும் தமிழகத்தில் சென்னை டிபிசத்திரம் ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ்வரி ஒரு இளைஞரை காப்பாற்றும் எண்ணத்தில் தோளில் தூக்கிப்போட்டு துரிதமாக செயல்பட்டுள்ளார் என குறிப்பிட்டு வாழ்த்தி பேசியுள்ளார்.

rajeshwari-stalin

இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி இளைஞருக்கு உதவி செய்த விவகாரம் பிரதமர் அளவுக்கு தெரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

newstm.in

Tags:
Next Story
Share it