Theme Check

திமுக இப்படித்தான் ஆட்சியை பிடித்தது.. மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!

திமுக இப்படித்தான் ஆட்சியை பிடித்தது.. மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!

திமுக இப்படித்தான் ஆட்சியை பிடித்தது.. மத்திய அமைச்சர் எல்.முருகன் பேட்டி..!
X

சேலத்தில் நடைபெற்ற பாஜக மாநில துணைத் தலைவர் கே.பி.இராமலிங்கம் இல்ல திருமண விழாவில் மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை இணையமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எல்.முருகன் கூறியதாவது; “ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மத்திய பாஜக அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றியுள்ளது. அந்த வகையில், கடந்த 8 ஆண்டில் எண்ணற்ற சாதனைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

வீடு தோறும் கழிவறை வசதி, சுகாதாரமான குடிநீர் திட்டம், அனைவருக்கும் வங்கிக் கணக்கு, விவசாயிகளுக்கு 6 ஆயிரம் ரூபாய் நிதி உதவி, உணவு பாதுகாப்பு சட்டம், சிறு நகரங்களில் விமான நிலையம், கடல்பாசி ஆராய்ச்சி மையம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

திமுக அரசு குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதாகவும், மானிய விலையில் டீசல் வழங்குவதாகவும், மகளிர் சுய உதவிக் குழுக்கள் வாங்கிய கடன்களை தள்ளுபடி செய்வதாகவும் பொய்யான வாக்குறுதிகளை கூறி ஆட்சியை பிடித்தது. ஆனால், அந்த வாக்குறுதிகள் எதையும் நிறைவேற்றவில்லை. இதனால் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

சேலத்தில் ராணுவ உதிரிபாகங்கள் தொழிற்சாலை, ஜவுளி பூங்கா விரைவில் அமைக்கப்பட உள்ளது. தமிழக கவர்னர் விவகாரத்தில் விடுதலை சிறுத்தை கட்சிகள் உட்பட சில அரசியல் கட்சியினர் விளம்பரம் செய்வதில் குறிக்கோளாக உள்ளனர்” என்று அவர் கூறினார்.

Next Story
Share it