Theme Check

இது அல்லவே அண்ணன் தம்பி பாசம்..!! அண்ணன் இறந்த செய்தியை கேட்டு அதிர்ச்சியில் சுருண்டு விழுந்து தம்பி மரணம்..!!

X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 42) கூலி வேலை செய்து வருகிறார். இவருக்கு மனைவி 2 மகன்கள் ஒரு மகள் உள்ளார்.

தொடர்ந்து நோய்வாய்ப்பட்டால் அவதிப்பட்டு வந்த இவர் புதுச்சேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இரவு 12 மணி அளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவர் இறந்து போன தகவல் சிங்காரப்பேட்டை யில் உள்ள உறவினர்களுக்கு தெரிவிக்கப்பட்டது.

இதுகுறித்து தகவல் அறிந்த இவரது தம்பி சொக்கலிங்கம் அதிர்ச்சி அடைந்துள்ளார். இரவெல்லாம் சோகத்தில் இருந்த சொக்கலிங்கம் அதிகாலை 3 மணி அளவில் டீக்கடையில் நின்றுக் கொண்டிருந்தபோது திடீர் மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்தில் உயிரிழந்தார்.

Brother-who-died-in-the-shock-of-brother-death

இறந்து போன சொக்கலிங்கத்துக்கு மூன்று மகன்கள் உள்ளனர். அதில் ஒரு மகன் மாற்றுத் திறனாளி. அண்ணன் தம்பி அடுத்தடுத்து மரணத்தால் சிங்காரப்பேட்டை அம்பேத்கர் நகர் கிராமமே சோகத்தில் ஆழ்ந்துள்ளது.

ஒரே குடும்பத்தில் இரண்டு பேர் இறந்துள்ளனர். இருவரின் உடல்களும் ஒரே இடத்தில் வைத்து உறவினர்கள் பதறி அழுதது பார்ப்போரை கண் கலங்க வைத்தது.

Next Story
Share it