Theme Check

நாளை முதல் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - இது தமிழகத்திற்கு அல்ல ..!!

நாளை முதல் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - இது தமிழகத்திற்கு அல்ல ..!!

நாளை முதல் 6-ம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு - இது தமிழகத்திற்கு அல்ல ..!!
X

தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், குஜராத்தில் நாளை முதல் 6ம் வகுப்பில் இருந்து மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படுகின்றன.

இந்தியாவில் கொரோனா 2வது அலை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனையடுத்து பல்வேறு மாநில அரசுகள் பாதிப்புக்களின் அடிப்படையில் ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் குஜராத்திலும் கொரோனா பாதிப்புக்கள் குறைந்து வருகின்றன.

இதனையடுத்து அம்மாநில அரசு 6 முதல் 8 ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் செப்டம்பர் 2 முதல் 50 சதவீத மாணவர்களுடன் திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதனை அம்மாநில கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தற்போது குஜராத்தில் 160 பேர் மட்டுமே கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதுவரை மொத்தம் 8,15,091 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்திருப்பதாகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 10,079 பேர் எனவும் அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Tags:
Next Story
Share it