அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....! சக நடிகைகள் குறித்து பிரபல நடிகை அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட்!
அரசியல்ல இதெல்லாம் சகஜமப்பா....! சக நடிகைகள் குறித்து பிரபல நடிகை அதிர்ச்சி ஸ்டேட்மெண்ட்!

ஹிந்தி சினிமா உலகில் தனக்கென தனி இடத்தை பிடித்து முண்ணனி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் நடிகை கங்கனா ரணாவத்.இவர் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகையாகவும் இருந்து வருகிறார். ஏ.எல் . விஜய் இயக்கத்தில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையிலும் நடித்து இருக்கிறார். சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டுள்ளது. இருந்தாலும் சக நடிகைகள் தன்னிடம் வெறுப்பு காட்டி வருவதாக குற்றம் சாட்டி உள்ளார்.
Ha ha ha it’s like movie mafia PR reporting Kangana has again gone against everyone and claimed herself to be the top most actress after news of getting a national award and alleged highest budget films... 😂 https://t.co/RVSYat1iG2
— Kangana Ranaut (@KanganaTeam) April 5, 2021
இதுகுறித்து தமது டுவிட்டர் பதிவில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “சினிமா துறையில் இருக்கும் எல்லா நடிகைகளையும் நான் ஆதரித்தும் வாழ்த்தியும் இருக்கிறேன். ஆனால் எனக்கு எந்த நடிகையும் ஆதரவோ வாழ்த்தோ இதுவரை சொல்லியது இல்லை. அனைவரும் சூழ்ச்சி செய்து எனக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர். மற்ற நடிகைகள் அவர்களின் படங்களை பார்க்க என்னை அழைக்கும் போது நட்பு அடிப்படையில் நானும் போவது வழக்கம். ஆனால் எனது படங்களை திரையிடும்போது நான் அழைத்தால் எனது அழைப்பையே அவர்கள் எடுப்பது இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.நடிகைகள் என்னை வெளியுலகில் மோசமாக சித்தரித்து வருகின்றனர்’’ என வேதனை பட தெரிவித்துள்ளார்.

