இது அதுல்ல.. புதுச்சேரி முன்னாள் ஆளுநருக்கு வந்த சோதனை !!
இது அதுல்ல.. புதுச்சேரி முன்னாள் ஆளுநருக்கு வந்த சோதனை !!

இந்தியாவின் முதல் பெண் ஐபிஎஸ் அதிகாரி என்ற பெருமையை பெற்றவர் கிரண் பேடி. ஐபிஎஸ் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், பாஜகவில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் புதுச்சேரி துணைநிலை ஆளுநராகவும் அவர் பதவி வகித்தார். தற்போது தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருக்கிறார்.
தற்போது ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்துபதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். இந்த நிலையில், ட்விட்டரில் அவர் ஷேர் செய்த வீடியோ ஒன்று தற்போது விமர்சனத்துக்கு அவர் உள்ளாகியுள்ளது.

கிரண்பேடி நேற்று ஒரு வீடியோவை ட்விட்டரில் ஷேர் செய்துள்ளார். அதில், வானில் பறந்து வரும் ஹெலிகாப்டரை சுறா மீன் ஒன்று கடலில் இருந்து தாவிச் சென்று பிடித்து கடலுக்குள் இழுத்து செல்வதை போன்ற காட்சி இருக்கிறது. அதற்கு கீழே, இந்த அரிய வீடியோவுக்கு நேஷ்னல் ஜியோகிரஃபி சேனல் 1 மில்லியன் டாலரை கொடுத்திருக்கிறது, என எழுதப்பட்டுள்ளது.
இந்த வீடியோவானது 2017-இல் வெளியான 'ஃபைவ் ஹெட்டட் ஷார்க் அட்டாக்' என்ற திரைப்படத்தில் வரும் ஒரு காட்சியாகும். ஆனால், இதனை உண்மையான வீடியோ என நினைத்து கிரண்பேடி ஷேர் செய்துள்ளார். அவ்வளவு தான்.. கிரண்பேடியை நெட்டீசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர். சாதாரண பள்ளி மாணவனுக்கு கூட இது போலியான வீடியோ என தெரியும். ஆனால் ஒரு ஐபிஎஸ் அதிகாரியாக இருந்தவருக்கு இது கூட தெரியவில்லையா.. என பலரும் கலவையான கமெண்ட் செய்துள்ளனர்.
newstm.in

