Theme Check

இது புதுசா இருக்கே..!! போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய பலே தம்பதி.! ​​​​​​​

இது புதுசா இருக்கே..!! போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய பலே தம்பதி.! ​​​​​​​

இது புதுசா இருக்கே..!! போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய பலே தம்பதி.! ​​​​​​​
X

கர்நாடக மாநிலம் பெங்களுருவில் 200க்கும் மேற்பட்ட போக்குவரத்து சிக்னல் பேட்டரிகளை திருடிய தம்பதியினர் கைது செய்யயப்பட்டுள்ளனர்.பெங்களூரு முழுவதும் ,சில மாதங்களாக போக்குவரத்து சிக்னல் பேட்டரி திருட்டுகள் அதிகரித்து வந்தது , இந்த திருட்டில் ஈடுபடுபவர்களை பிடிக்க தொடர்ந்து போலீசார் முயற்சிகளை மேற்கொண்டு வந்தனர்

இந்நிலையில் இது தொடர்பாக கணவன்-மனைவி ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் ஜூன் 2021 மற்றும் ஜனவரி 2022-க்கு இடையில் நகரம் முழுவதும் உள்ள 68 போக்குவரத்து சந்திப்புகளில் இருந்து 230-க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடியுள்ளனர் ,

பெங்களூரு , சிக்கபனாவரத்தைச் சேர்ந்த எஸ்.சிக்கந்தர் (வயது 30) மற்றும் அவரது மனைவி நஸ்மா சிக்கந்தர் (வயது 29) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் 230-க்கும் மேற்பட்ட பேட்டரிகளை திருடி, கிலோ 100 ரூபாய்க்கு விற்றதாக என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:
Next Story
Share it