ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது காஸ்ட்லி வீரர் இவர்தான்!!
ஐபிஎல் வரலாற்றில் 2ஆவது காஸ்ட்லி வீரர் இவர்தான்!!

ஐபிஎல் மெகா ஏலத்தில் மிகவும் விலையுயர்ந்த வீரர்களில் ஒருவராக எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷானை மும்பை இந்தியன்ஸ் ரூ 15.25 கோடிக்கு வாங்கியுள்ளது.
ஐபிஎல் 2008இல் டெல்லி கேப்பிட்டல்ஸ் (டிசி) அணியால் 16 கோடிக்கு வாங்கப்பட்ட யுவராஜ் சிங் ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர். அதற்கு அடுத்த இடத்தை இஷான் கிஷன் பெற்றுள்ளார்.
இஷான் கிஷனிடம் உள்ள திறமையை விட்டுக் கொடுக்க மறுத்து, மும்பை இந்தியன்ஸ் இறுதியில் ஏலத்தை வென்று, ஐபிஎல் ஏல வரலாற்றில் கிஷானை இரண்டாவது அதிக விலையுள்ள இந்திய வீரர் ஆக்கியது.

ஐந்து முறை ஐபிஎல் சாம்பியனுடன் மீண்டும் இணைந்ததில் கிஷன் மகிழ்ச்சியடைந்த வீடியோவை மும்பை இந்தியன்ஸ் பகிர்ந்தது. அதில் இஷான் கிஷன், MI உடன் மீண்டும் வருவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
அங்கு இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன், நான் எனது அணியில் சேரும்போது என்னால் முடிந்ததைச் செய்வேன் என்று நம்புகிறேன் என்றார்.
குயின்டன் டி காக்கை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸிடம் (LSG) இழந்ததால், MI கிஷனைத் திரும்பக் கொண்டுவர ஆர்வமாக இருந்தது. அதனால் இஷான் கிஷனை மும்பை ஏலத்தில் எடுத்துள்ளது.
newstm.in

