கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!!
கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி..!!

அரியலூர் வந்த தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், செய்தியாளர்களை சந்தித்து பேசிதாவது,
தமிழ்நாடு அரசின் ஓராண்டு சாதனையில் போற்ற கூடிய சாதனைகள் எதுவும் இல்லை, இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. தமிழ்நாடு முழுவதும் மின்வெட்டு உள்ளது. அதை யாரும் மறுக்க முடியாது. ரேஷன் அரிசி கடத்தலில் தமிழ்நாட்டில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு அதிக அளவு கடத்தப்படுகிறது. இதனை தமிழ்நாடு முதல்வர் தடுக்க வேண்டும்.

பாலியல் வன்கொடுமை, செயின் பறிப்பு சம்பவம், சட்ட ஒழுங்கு எந்த அளவிற்க்கு கேள்வி குறியாகி உள்ளது என்பதை மக்களே அறிவார்கள். ஒன்றிய, மாநில அரசுகள் அறிவிப்பு அரசாகவே உள்ளது. மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும்.

தமிழ்நாட்டில் இலவசங்கள் தொடர்ந்தால் இலங்கை போல் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது. ஒன்றிய அரசு கச்சத்தீவை மீட்க இதுவே சிறந்த நேரம் அதனை செய்து தமிழ்நாடு மீனவர்கள் நலனை காக்க வேண்டும் என்று கூறினார்.
Next Story

